அமேசான் காடுகளில் தகவல்தொடர்புக்கான மொழி பயோஅக்கவுஸ்டிக்!
சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா என பாடல் கேட்டிருப்பீர்கள். உண்மையில் குயில் நமக்காகத்தான் பாடுகிறதா? இல்லவே இல்லை. அவை தகவல்தொடர்புக்கான மொழி அது. இதுபற்ற அமேசான் காடுகளில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் ஆலிவர் மெட்கால்ப் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
ஆராய்ச்சிபூர்வமாக நாம் இன்னும் காட்டுயிர் வாழ்க்கையை புரிந்துகொள்ளவில்லை.
அதன் காரணமாகவே இன்றுவரை நம்மால் காட்டுத்தீயை எப்படி ஏற்படுகிறது என்று ஓரளவு தெரிந்துகொண்டாலும் கூட அதனை அணைக்கமுடியவில்லை. இதற்காக இப்போது ஆலிவர் பயன்படுத்தும் முறைதான் பயோஅக்கவுஸ்டிக். இம்முறையில் பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் தகவல்தொடர்பை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய முடியும்.
பறவைகள் குரல் எழுப்பது பாடுவது போன்று தோன்றினாலும் அவை தகவல்தொடர்புக்காக இப்படி செய்கின்றன. அவை தொடர்புகொள்ளும் முறை, அதிலுள்ள செய்தி ஆகியவற்றை அறியவே நாங்கள் முயல்கிறோம் என்றார் ஆலிவர்.
மனிதர்கள் பொதுவாக பறவைகளை எப்படி புரிந்துகொள்கிறார்கள்ழ பார்வையின் வழியாகத்தான். ஆனால் பறவைகளின் உலகில் இம்முறையில் நுழைவது கடினமானது. எனவே, இரவில் நைட்ஜார் அல்லது ஆந்தைகளை கவனிப்பது முக்கியமானது. இதன் மூலம் அவற்றின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளமுடியும். பயோ அக்கவுஸ்டிக் முறை மூலம் பறவைகளை எளிதாக பின்தொடரலாம். மழைக்காடுகளில் பறவைகளை பார்வை மூலம் பின்தொடர்வது மிக கடினம். இரவில் அவற்றை காடுகளில் மனிதர்கள் பின்தொடர்வது அவர்களின் உயிருக்கு ஆபத்தும் கூட. இரவில் பல்வேறு விலங்குகளும் , பாம்புகளும் துடிப்பாக இரை தேடிக்கொண்டிருக்கு்ம்.
30 கருவிகளை மரத்தில் பொருத்தி நைட்ஜார் பறவையில் ஒலியை ஆலிவர் பதிவு செய்திருக்கிறார். அதனை எப்படி நைட்ஜார் என உறுதி செய்கிறா்ர் என்று கேட்டோம். அதற்கு, உலகில் 30க்கும் குறைவான நபர்கள் மட்டுமே இந்த பறவையின் குரல் இது என உறுதிபடுத்தும் திறன் பெற்றிருப்பார்கள். எனவே நாங்கள் இதற்கு கணினியை நாடி தெளிவு பெறுகிறோம். இப்பதிவுகள் மூலம் காடுகளில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் அறிய முடியும் என நம்புகிறோம். இதன்மூலம் எதிர்காலத்தில் அமேசான் காடுகளில் நடைபெறும் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றார் ஆலிவர்.
பிபிசி வைல்ட் லைப்
கருத்துகள்
கருத்துரையிடுக