சமூக வலைதளங்களில் எதிர்மறையான விஷயங்கள் அதிகம் வருகின்றன! - பங்கஜ் திரிபாதி, இந்தி நடிகர்
பங்கஜ் திரிபாதி
இந்தி நடிகர்
ஒரு படம் ஓடிடியில் வெளியாவதற்கும், அதன் பட்ஜெட்டிற்கும் தொடர்பு உள்ளதா?
ஒரு படத்தை அதன் வருமானம், பட்ஜெட் வைத்து திட்டமிடக்கூடாது என்று நினைக்கிறேன். ஓடிடியைப் பொறுத்தவரை வார இறுதியில் வருமானம் கிடைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உங்கள் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் பார்ப்பார்கள். இல்லையெனில் அதனை புறக்கணித்து விடுவார்கள். நாம் கதை சொல்லுவதில் இன்னும் கவனமாக இருப்பதுதான் முக்கியம்.
நீங்கள் உங்கள் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டீர்களே ஏன்?
அதில் நிறைய எதிர்மறை விஷயங்கள், அரசியல் வருகின்றன. நான் இரு நாட்களுக்கு ஒருமுறை எனது சமூக வலைத்தள கணக்குகளை சோதிப்பேன். மொபைல் போன்களையும் சமூக வலைத்தளங்களையும் குறைவாக பயன்படுத்துவது நமக்கு நல்லது. அவை நம்மை பயன்படுத்திக்கொள்வதை நாம் எப்போதுமே அனுமதிக்க கூடாது.
மிர்ஷாபூர் வெப் தொடரில் வன்முறை அதிகமாக உள்ளதே? இதன் இரண்டாவது பகுதியும் அப்படித்தானா?
நான் வன்முறையின் ரசிகன் அல்ல. கடந்த ஏப்ரல் பொதுமுடக்க காலத்தில்தான் நான் முழு தொடரையும் பார்த்தேன். இரண்டாவது பகுதியில் வன்முறை குறைவாகவே இருக்கும். புதிய கதாபாத்திரங்கள், பல்வேறு சிக்கல்கள் என கதை பயணிக்கும்.
இந்தி திரைப்படத்துறையை பலரும் அவதூறாக பேசுகிறார்களே?
அப்படி பேசும் பலருக்கும் அத்துறை பற்றி உண்மை தெரியாது. உண்மையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மனிதர்களை சினிமா செட் தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது. நான் சிறிய பாத்திரங்களில் நடித்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகே முக்கியமான நடிகரானேன். அடுத்த ஆண்டுக்கு நான் நடித்து 10 படங்கள் வெளியாகின்றன.
சுகானி சிங்
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக