இந்தியாவில் சூப்பர் ஆப்பிற்கான தேவை உள்ளதா? வரிசை கட்டும் டாடா, ஜியோ, பேடிஎம்

 

 

Grab Hotels launches in the Philippines, five more ...

சூப்பர் ஆப்பின் தேவை இருக்கிறதா?

இன்று நம் அனைவரின் போன்களிலும் ஷாப்பிங் தளங்களுக்கான ஆப் குறைந்தபட்சம் ஒன்றேனும் உள்ளது. இதுபோக பிற ஓடிடி தளங்களுக்கான ஆப்கள் தனி. இவை அனைத்தும் ஒன்றாக ஒரே ஆப்பில் இணைந்திருந்தால் அதுதான் சூப்பர் ஆப்.

சூப்பர் ஆப்பில் ஒரு வணிக குழுமத்தின் அனைத்து சேவைகளும், அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள பிற நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் ஒரு கிளிக்கில் கிடைக்கும். இதன்மூலம் தேவையில்லாமல் தனித்தனியாக பல்வேறு ஆப்களை ஒருவர் தரவிறக்கும் அவசியம் இல்லை.

இந்த சூப்பர் ஆப் ஐடியாவை டாடா குழுமமே முன்னதாக யோசித்து அதே வேகத்தில் அறிவித்துவிட்டது. டாடா குழுமம் இந்த சூப்பர் ஆப்பை வால்மார்ட் குழுமத்துடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறது. இதற்கான பட்ஜெட்டாக வால்மார்ட்டின் துணை நிறுவனமான ஃபிளிப்கார்ட் 25 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. உணவு, உடை, வாழ்க்கை முறை, கல்வி, நிதி, பொழுதுபோக்கு என அனைத்து பிரிவுகளும் ஒரே ஆப்பில் உள்ளடங்கிவிடும்.

இதற்கடுத்த சூப்பர் ஆப் வாய்ப்பு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடம் உள்ளது. இதன் மை ஜியோ ஆப் சூப்பர் ஆப்பாக மாறினால், கல்வி, மருத்துவமனை, பொழுதுபோக்கு, சில்லறைப் பொருட்கள், வாழ்க்கைமுறை சார்ந்த பொருட்கள், காய்கறிகள் என ஏராளமான பிரிவுகளை உள்ளே அடக்க முடியும். இதற்கென 280 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  இந்த வகையில் இதன் வணிகம் 13 பில்லியன் டாலர்களாக இருக்கும் என ஆராய்ச்சி நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. ஜியோவில் பேஸ்புக், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் 4.36 ட்ரில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதால் சூப்பர் ஆப் மூலம் நிறைய லாபத்தை ஜியோ சம்பாதிக்க முடியும்.

கூகுளோடு சண்டை போட்ட பேடிஎம் நிறுவனம் அண்மையில்தான் மினி சூப்பர் ஆப் ஸ்டோரை உருவாக்கிவிட்டது. இதில் உள்ள ஆப்களை ஒருவர் தரவிறக்கம் செய்யாமலே பயன்படுத்தமுடியும். பேடிஎம் நிறுவனத்திற்கான முதலீடுகளை சீன நிறுவனமான அலிபாபா செய்து வருகிறது.

சூப்பர் ஆப் கான்செப்டை சீனாதான் முதலில் கண்டுபிடித்தது. அங்குள்ள வீசாட் ஆப் மூலமே கார்களை புக்செய்து பயணம் செய்யமுடியும். பல்வேறு கட்டணங்களை கட்டமுடியும். அங்கு 80 சதவீத மக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆசியாவில் மேலும் புகழ்பெற்ற ஆப்கள் அலிபே - சீனா, சிங்கப்பூரைச் சேர்ந்த கிராப், தென்கொரியாவின் நவெர் சர்ச் எஞ்சின் ஆகியவை.

Alipay for Android - Free download and software reviews ...


கூகுள், தனது ஆப்களை இதுபோல ஒரே ஆப்பாக ஏனோ இதுவரை மாற்றவில்லை. ஆனால் இது அப்படி மாற்றவேண்டிய நேரம்தான். இதற்கு எதிராகவும் கருத்துகள் உள்ளன. சீனாவில் பெரிதாக போட்டி இல்லை. எனவே சூப்பர் ஆப்கள் வெற்றி பெற்றுள்ளன. இந்தியாவில் அதுபோன்ற நிலை இல்லை.  மேலும் ஸ்பாட்டிபை என்றால் இசை, அதிலேயே வேறு விஷயங்களை செய்ய யாரும் முயல்வதில்லை என்று சொல்லுகிறார்கள். ஜியோவில் வாட்ஸ்அப் பே என்ற வசதி சேரும்போது அதன் 400 மில்லியன் பயனர்களும் பயன்பெறமுடியும். இந்த வசதிக்கு இன்னும் அரசு அனுமதி கொடுக்கவில்லை.

பிஸினஸ் ஸ்டாண்டர்டு

சுராஜித்தாஸ் குப்தா


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்