நேசிக்கும் அனைவரும் பிரிந்துபோக நாயகன் எடுக்கும் முடிவு! - அவுட் ஆஃப் ஃபர்னாஸ்

 

Out of the Furnace

Movie Review: Out of the Furnace - Electric Shadows
அவுட் ஆஃப் ஃபர்னாஸ்

Director:Scott Cooper
Produced by:Jennifer Davisson Killoran, Leonardo DiCaprio, Ryan Kavanaugh, Ridley Scott, Michael Costigan
Writer(s):Brad Ingelsby, Scott Cooper
 
 
எளிமையான கதை. தம்பியை பாசத்தோடு மில்லில் வேலை பார்த்து சூதாட்ட கடன்களைக் கூட அடைத்து காப்பாற்றி வருகிறார் அண்ணன். ஆனால் தம்பியை தெருச்சண்டை விவகாரத்தில் போதைப்பொருள் மாஃபியா தலைவன் ஒருவன் கொன்றுவிடுகிறான். இதனால் அவனை பழிவாங்க அண்ணன் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. 
 
படத்தில் வேகமான சேசிங், பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள் என ஏதும் இல்லை.  அப்பா மில் வேலை பார்த்து நோய் வந்து படுக்கையில் கிடக்கிறார். அவரைப்போலவே மில் வேலைக்கு செல்கிறார் அண்ணன். தம்பி ராணுவத்தில் வேலை செய்துவிட்டு வந்து தனக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கிறான். குறுகிய நேரத்தில் அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கிறான். அப்போதுதான் தெருச்சண்டை போட்டு தோற்றால் அதிக பணம் கிடைக்கும் என தெரிகிறது. அதை நடத்துபவர்கள் பற்றி தெரியாமல் அதில் மாட்டிக்கொள்கிறான். 


படம் பழிக்குப்பழி வாங்குவது பற்றி அதிக முயற்சி செய்யவில்லை. மனிதர்களுக்கு இடையில் உள்ள நட்பு, துரோகம், காதல், பாசம் என அனைத்து விஷயங்களையும் காட்ட முயன்றிருக்கிறார்கள். படத்தில் கிறிஸ்டியன் பேல் நன்றாக நடித்திருக்கிறார். இவருக்கு போட்டி போட்டு வுடி ஹார்ல்சன் நடித்திருக்கிறார். இவருக்கு படத்தில் அதிக காட்சிகள் கொடுத்திருக்கிறார்கள். எந்த கதாபாத்திரம் என்ன செய்யுமென தெரியாத அடக்கப்பட்ட உணர்ச்சிகளைக் கொண்ட பாத்திர வடிவமைப்பு படத்தின் புதுமை. 

இழப்பின் வலியை மௌனமாக உள்வாங்கிக்கொண்டு வாழ்வதை கிறிஸ்டியன் பேல் கதாபாத்திரம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. 

தனியொருவன்!

கோமாளிமேடை டீம் 




 

கருத்துகள்