இந்திராகாந்தி போல துடிப்பாக செயல்படும் தலைவர் காங்கிரசுக்கு தேவை! - குலாம் நபி ஆசாத்

 

 

 

Ghulam Nabi Azad praises Bangladesh PM Sheik Hasina’s role ...
குலாம் நபி ஆசாத்

 

குலாம் நபி ஆசாத்

நீங்கள் நாற்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருந்துள்ளீர்கள். ஆனால் இப்போது அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். இதற்கு நீங்கள் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதுதான் காரணமா?

நான் கட்சி தலைமையிடம் 2004லிருந்தே என்னை பதவியிலிருந்து விடுவிக்கச்சொல்லி கேட்டுவந்தேன். ராஜீவ்காந்தி தொடங்கி பல்வேறு தலைவர்களுடன் நான் பொது செயலாளராக பணியாற்றியுள்ளேன். இந்த பணியில் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் காங்கி ஸ் கட்சிக்காக பணியாற்றியுள்ளேன். ஆனால் இன்று எனக்கு வயதாகிறது. குடும்பம் சார்ந்த சில பொறுப்புகளும் உள்ளன.முன்னர் தீவீரமாக உழைத்தது போல இன்று என்னால் உழைக்கமுடியவில்லை. 2016இல் உத்தரப்பிரதேசம், 2019இல் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கட்சி பொது செயலாளராக இருந்துள்ளேன். இதுபற்றித்தான் நான் கடிதம் எழுதி தலைமையிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் என்னை பொறுப்பிலிருந்து விடுவித்தது என் மீதான கருணையாகவே பார்க்கிறேன். பழிவாங்கும் உணர்ச்சியாக அல்ல. சோனியா காந்தியின் குடும்பம் என்மீது மரியாதையுடன்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள் .அந்நிலை இன்றுவரை மாறாமல் தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சி துடிப்புடன் இயங்கவில்லை, சரியான தலைமை இல்லை என்று எப்படி உணர்ந்துகொண்டீர்கள்?

மக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி பதவியில் இருந்தது. அந்த தன்மை பின்னர் குறையத்தொடங்கியது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் கட்சி படுதோல்வியை தழுவியது. நாம் இப்போதாவது கட்சிக்குள் உள்ள பிரச்னைகளை தீர்க்க முன்வரவேண்டும். நான் இ்ந்தக்கோரிக்கையை இப்போது எழுப்பவில்லை. பத்தாண்டுகளாக எழுப்பி வருகிறேன். கோரிக்கை செயல்பாட்டிற்கு வராததற்கு நாங்களும் ஒரு காரணம். ஒருமுறை எங்கள் பிரச்னைகளை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டால் அதனை விரைவில் சரி செய்துவிடுவோம்.

கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க இப்போது என்ன அவசரம்? சோனியாகாந்திதானே இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்கிறார்?

கடந்த ஆண்டு ராகுல்காந்தி கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விலகிவிட்டார். காங்கிரஸ் கமிட்டி சோனியாகாந்தியை தலைமை ஏற்க கேட்டுக்கொண்டது. அவர் இடைக்காலத் தலைவராகவே பதவியேற்றார். அவர் அப்போதே என்னால் ஓராண்டுக்கு மேல் தலைவராக நீடிக்கமுடியாது என்று கூறிவிட்டார். அதனால்தான் ஓராண்டு முடிவுக்கு வந்ததும் புதிய தலைவருக்கான தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கூறினோம். ராகுல்காந்தி தனது நிலையை வெளிப்படையாக கூறி, தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனவே நாங்கள் மூன்றாவது ஒருவரை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் நிலை. எனவேதான் நாங்கள் கடிதம் எழுதி சோனியாகாந்தி அவர்களுக்கு அனுப்பினோம். முழுநேர தலைவர் தேவை என்று அதில் வலியுறுத்தி இருந்தார். ஆனால் அந்த கடிதம் அவரது உடல்நிலைக் குறைவை குறிப்பதாக மாற்றப்பட்டுவிட்டது.

ராகுல்காந்தி அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவராக வாய்ப்புள்ளதா?

காங்கிரஸ் கட்சி தேர்தல், அடுத்த ஆறுமாதங்களுக்கு நடைபெறும். அதில் காங்கிரஸ் கமிட்டி அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அதில் எங்களுக்ககு எந்த பிரச்னையும் இல்லை. இந்த தேர்தலில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் நாங்கள் அவருக்குப் பின்னாடி உறுதியாக நிற்போம்.

நீங்கள் துடிப்பாக இயங்கும் எளிதாக அணுகும் தலைவர் என்று குறிப்பிடுகிறீர்கள். இதனை என்ன பொருளில் சொல்லுகிறீர்கள்?

நான் ஆறு காங்கிரஸ் கட்சி தலைவர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன். அதில் மூன்றுபேர் பிரதமராக பணியாற்றியுள்ளனர். இந்திராகாந்தி இதில் முக்கியமான சான்று. பிரதமராக இருந்தபோது ஆறுநாட்கள் பணியாற்றுவார். அதில் தினசரி இரண்டு மணிநேரம் மக்களை சந்திக்க ஒதுக்குவார். மக்கள் அவரது வீட்டுக்கு திரண்டு வருவார்கள். அவரை சந்திக்க பெரியளவு அனுமதியைப் பெற அவசியமில்லை. இந்திராகாந்தி அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒருமணிநேரம் நேரடியாக பேசுவார். இதன்மூலம் அவருக்கு கட்சி பற்றியும் ஆட்சி பற்றியும் தெளிவாக  கருத்துகள் கிடைத்து வந்தன. கட்சி தொண்டர்கள் 2-3 நாட்கள் அவரைக் காத்திருந்த சந்திக்க வேண்டியதில்லை. இதற்கு காரணம் அவர் தினசரி காலை எட்டு மணி தொடங்கி இரவு  இரண்டு மணி வரை வேலை செய்து வந்தார். இதைத்தான் நான் துடிப்பான செயல்திறன் கொண்ட தலைவர் என்று சொல்கிறேன். அவரை எளிதாக யாரும் பார்க்கமுடியும். அனைவரோடும் சிறப்பான தொடர்பை உருவாக்கி வைத்திருந்தார். இந்த வசதியும் திறனும் இன்றைய வரைக்கும் எந்த கட்சியிலும் இல்லை.

இந்தியா டுடே

கௌசிக் டேகா

 

கருத்துகள்