இங்கிலாந்து ராணி வழங்கும் பெருமைக்குரிய விருதுகள்! - நடப்பு ஆண்டில் பரிசு பெற்றவர்கள் யார்?

 

 

 

Lancaster University collect second consecutive MBE

 

 

இங்கிலாந்து ராணி அளிக்கும் பெருமைமிக்க விருதுகள்

ஆண்டுதோறும் இங்கிலாந்தில் ஜூன் மாதம் மக்களுக்கு சாதனை செய்த  மனிதர்களுக்கு இங்கிலாந்து ராணி விருதுகளை வழங்குவார்.நடப்பு ஆண்டில் பெருந்தொற்று பாதிப்பால் விருதுகளை வழங்கும் பணி தாமதமாகியுள்ளது. ஆனால் விருது பெறுபவர்களுக்கான 414 பேர் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விருதுக்கு யாரும் யாரையும் பரிந்துரைக்கலாம். இவர்களை இதற்கான கமிட்டி ஒன்று தேர்ந்தெடுக்கும். இப்பட்டியலை இங்கிலாந்து பிரதமரும், ராணியும் பார்வையிட்டு இறுதி முடிவை எடுப்பார்கள்

இப்பட்டியலில் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பாக சேவையாற்றிய பெலிகா குவாகு என்ற நர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முகத்திற்கான மாஸ்க் தயாரித்த தியோடர் ரைட் என்ற பதினாறு வயதான சிறுவன் பிரிட்டிஸ் எம்பயர் மெடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கிய மார்க்கஸ் ராஸ்போர்டு என்பவர் விருதுப்பட்டியலில் உள்ளார். ஜோ விக்ஸ் என்பவர், பொதுமுடக்க காலத்தில் சிறுவர்களுக்கான உடற்பயிற்சியை சொல்லித்தந்து பெருமை மிக்க விருதை பெறவிருக்கிறார்.
 

the week junior

கருத்துகள்