பழங்குடி மக்களின் வாழ்க்கையை சூறையாடிய தங்கவேட்டை! - பனியில் உறைந்த தங்கம்
Map |
பனியில் உறைந்த தங்கம்
காமிக்ஸ்
அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் நடைபெறும் கதை. அங்கு நடைபெறும் தங்கவேட்டைக்காக வெளியூர்களிலிருந்து அங்கு வந்து குடியேறும் மக்கள், அந்த மாகாணத்திற்கு இழைக்கும் கொடுமைகள் சீர்கேடுகளைப் பற்றிய காமிக்ஸ் இது.
அப்படித்தான் பாட் போவர்ஸ் என்பவர் அங்கு வருகிறார். கையில் நூறு டாலர் மட்டுமே இருக்கிறது. உணவுக்கு போக மீதி உள்ள பணத்தை கொண்டு ஸ்வர்ணா என்ற ஸ்லெட் இழுக்கும் கர்ப்பிணி நாயை வாங்குகிறார். பிறகு பயணத்தை தொடங்குகிறார். மேரி என்ற பெண்ணை சந்திக்கிறார். காதல் எல்லாம் கிடையாது காரியம் மட்டுமே. செய்துவிட்டு பிரிகிறார்கள். தங்கம் தேடி கண்டுபிடிப்பதுதான் லட்சியம். பாட் போவர்ஸ்க்கு எந்த இடமும் சொந்தம் கிடையாது. குறிப்பிட இடத்தை என்று தேடாமல் அப்படியே தேடி அலைகிறான். அவனை அங்கிருந்து கிளப்ப பழங்குடி தலைவர் மோர்ஸ் முயல்கிறார். ஆனால் பாட் அதற்கு பயப்படுவதில்லை.
அந்த பழங்குடி தலைவர் பாட் போவர்ஸ் எச்சரிக்கிறார் ஒருகட்டத்தில் அவனைக்கொல்லவும் முயல்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி.
மனிதர்களின் பேராசை, இயற்கையின் வளங்கள், பழங்குடி மக்கள் வாழ்க்கை என பல்வேறு விஷயங்களை 150 பக்க காமிக்ஸில் நெஞ்சம் உருகும்படி பேசியிருக்கிறார்கள்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக