பெருந்தொற்று காலத்தில் தொழிலதிபர்கள் என்ன நிர்வாகத்திட்டங்களை பின்பற்றினார்கள்? - வணிக மந்திரம் - டாடா, டாபர், நெஸ்லே
வணிக மந்திரம்
சி.கே. வெங்கட்ராமன்
தலைவர், தி டைட்டன் கம்பெனி
எனக்கு இப்போதைக்கு இருக்கும் பிரச்னை, மக்கள் பெருந்தொற்று காலத்தில் எப்படி பண்டிகைகளை கொண்டாடுவார்கள். உடைகளை உடுத்துவார்கள் என்பதுதான். எங்களது விற்பனைக்குழு, புதிய வழியில் வாடிக்கையாளர்களை அணுகுவதற்கான பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்று உணவகங்களுக்கு செல்வது, திருமண பார்ட்டிகள் ஆகியவை நடைபெறுவது அரிதாகிவிட்டது. இன்று வீட்டில் பணியாற்றும் மக்களுக்கு நாம் மகிழ்ச்சியை கொடுப்பதற்கு யோசித்து வருகிறோம். அண்மையில் ஒரு வீடியோவை நான் பார்த்தேன். ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் குழந்தைகளுக்காக உணவகம் ஒன்றை உரு்வாக்கினர். இதில் மனைவி சர்வராகவும், கணவர் சமையற்கலைஞராகவும் இருந்தனர். ஹோட்டலுக்கு உண்டான அனைத்து விஷயங்களும் இதில் இடம்பெற்றிருந்தன. உண்மையில் இதுபோன்ற சூழலை நாம் வீட்டில் உருவாக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன்.
டிஜிட்டலுக்கு மாறுவோம்!
suresh narayanan |
சுரேஷ் நாராயணன், தலைவர், நெஸ்லே இந்தியா
பெருந்தொற்று காலம் வாடிக்கையாளர்களின் மனநிலையை பெருமளவு மாற்றியுள்ளது. இன்று மக்கள் நான்கு சுவர்களுக்குள் பல்வேறு பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டனர். மேலும் குறைந்த விலையில் சிறிய பாக்கெட்டுகளில் உள்ள பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஊட்டசத்து சார்ந்த கவனம் மக்களுக்கு அதிகரித்து வருகிறது.
எங்களது நெஸ்லே நிறுவனம் டிஜிட்டல் வழியில் பொருட்களை விற்க தயாராகி விட்டது. எனவே, மேகி, நெஸ்கபே, கிட்கேட், நான்குரோ, செரிகுரோ என பல்வேறு பிராண்டுகள் இந்த முறையில் புகழ்பெற்றவையாக உள்ளன. நாங்கள் எங்களது உணவுப்பொருட்களை கடைகள் மற்றும் டிஜிட்டல் வழி எளிதில் கிடைக்கும்படி செய்கிறோம். அடுத்து ஊட்டச்சத்தான பொருட்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். பொருட்களை பல்வேறு விதங்களில் சமைப்பது பற்றிய தகவல்களை குறிப்புகளை மக்களுக்கு வழங்குகிறோம்.
கொரோனா பேரழிவு தந்த வாய்ப்பை கைவிட்டுவிடக்கூடாது.
கொரோனா பரவலாகத் தொடங்கியவுடனே மக்கள் இணையத்தில் நோய்எதிர்ப்பு சக்தி, விட்டமின் சி பற்றி அதிகம் தேடத்தொடங்கினர்.பெருந்தொற்று காலத்தில் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் இருப்பது மிக அவசியம். இந்தவகையில் நாங்கள் ஆயுர்வேதம் சார்ந்த பொருட்களை அதிகம் விற்று வருகிறோம். எனவே நாங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தீவிரமாக உழைத்தோம். இதன் விளைவாக மூன்று மாதங்களில் 40 பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளோம். மேலும் பல்வேறு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் இதுபோன்ற பெருந்தொற்று சூழ்நிலை குறைவான காலம் கொண்டதாக இருந்தாலும் அதனை வீணாக்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம்.
மொகித் மல்கோத்ரா
இயக்குநர், டாபர்
என்ன தேவையோ அதைத்தான் செய்தோம்
பிரதீப் பரமேஸ்வரன், ஏபிஏசி, ஊபர்
வாகனத்துறை பெருந்தொற்று காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேசமயம் எங்கள் நிறுவனம் வளருவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. நாங்கள் இக்காலத்தில் வேலை இழப்பை் ச்ந்தித்த ஓட்டுநர்களுக்கான நிதித்திட்டத்தை உருவாக்கினோம். அவர்கள் பணியாற்றும் தினங்களில் முழுத்தொகையை கமிஷன் பெறாமல் அவர்களுக்கே வழங்கினோம். மேலும், உபர் மெடிக் என திட்டத்தை தொடங்கி மருத்துவப்பணியாளர்களுக்கு பல்வேறு போக்குவரத்து சேவைகளை வழங்கினோம். இதுதவிர 2 லட்சம் பாட்டில்கள் சானிடைசர்களை டிரைவர்களுக்கு வழங்கியுள்ளோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக