ஆணோ, பெண்ணோ காதலை ஒளித்து வைக்காதீர்கள்! - ஹோலி ஸ்லெப்ட் ஓவர் 2020
Holly Slept Over
ஹோலிஸ்லெட்ப் ஓவர்
Director:Joshua Friedlander
Writer(s):Joshua Friedlander
Music by | Jason Nesmith |
---|---|
Cinematography | John W. Rutland |
நோயல், ஆட்ரே என்ற இருவரும் தம்பதிகள். ஓராண்டாக முயன்றும் குழந்தை பெற முடியவில்லை. இதற்கு என்ன காரணம் என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அவர்களை சந்திக்க ஆட்ரேவின் தோழி ஹோலி வருகிறாள். அவளுக்கும் ஆட்ரேவுக்கும் கல்லூரி காலத்தில் நடந்த உறவு நோயலுக்கு தெரிய வர அவர் அதிர்ச்சியாகிறார். உண்மையில் இருவருக்குள்ளும் என்ன உறவு என்பதுதான் படத்தின் முக்கியமான மையக்கதை.
படம் எதையும் மறைமுகமாகவெல்லாம் சொல்லவில்லை. நேரடியாகவே காதல், காமம், குழந்தை பிறந்த பிறகு கணவனை காயவிடும் மனைவி என பல்வேறு விஷயங்களை பேசுகிறது. ஒருவகையில் காதல் கல்யாணத்திற்கு பிறகு என்னவாகிறது என பேசுகிற படமாகவும் இருக்கிறது.
நோயலின் நண்பர் பீட்டே, மனைவி பற்றி நோயலிடம் புலம்புகிறார். நோயல் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அவருக்கும் புதுபுது விதங்களில் உடலுறவை அனுபவிக்க நினைக்கிறார். ஆனால் இருவருக்குள்ளும் சந்தோஷம் காவிரி ஆறாக பெருகும்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. என்ன காரணம் என தேடும்போது பதிலாக ஹோலி வருகிறாள்.
ஓரினச்சேர்க்கை, காதல், பொறாமை, மூன்றுபேர் உடலறவில் ஈடுபடுவது, இதைப்பற்றி பேச தயக்கம் என பல்வேறு விஷயங்களையும் படத்தில் பார்க்கமுடிகிறது.
படத்தில் உறுதியான மையக்கதையைப் போலவே உறுதியாக கதாபாத்திரமாக உருவாகியுள்ளது, ஹோலியின் பாத்திரம். இங்கிலாந்தைச் சேர்ந்த நதாலி இம்மானுவேல் இந்த பாத்திரத்தை புன்னகையும், போலித்தனம் இல்லாத நடிப்புமாக கடந்து போகிறார். ஏன் நோயல் கூட த்ரீசம் பற்றி எப்படி சொல்லுவது என தவியாக தவித்து சொல்லும்போது, சூப்பர் வீக் எண்டில் இதை விட வேறென்ன பெஸ்டாக செய்ய முடியும்? ஆட்ரேகிட்ட நீங்க சொல்லுறீங்களா என கேட்டு அதிர்ச்சி அடையச்செய்யும் காட்சி, செக்ஸ் முடிந்தபிறகு உங்களுக்கு நான் ஏ கிரேடு தருவேன் என நோயலிடம் சொல்லுவது என காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்வது இவர்தான்.
படத்தின் முக்கிய பாத்திரம் ஹோலியும், பீட்டேவும்தான். இருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
அந்தரங்க ரகசியம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக