ஸ்பேம் கால் அழைப்பில் இந்தியாவிற்கு 5 வது இடம்! - இப்பிரச்னையை எப்படி தடுப்பது?
ஸ்பேம் கால்ஸ்
அண்மையில் ட்ரூகாலர் ஆப், 2019ஆம் ஆண்டிற்கான ஸ்பேம் அழைப்புகளுக்காக தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்தியர்கள் 30 பில்லியன் அளவுக்கு ஸ்பேம் அழைப்புகளை சந்தித்து உள்ளனர். ட்ரூகாலர் ஆப், 29.7 பில்லியன் அழைப்புகளை கண்டுபிடித்து தடை செய்துள்ளது. இதில் 8.5 பில்லியன் குறுஞ்செய்திகளும் அடக்கம்.
ட்ரூகாலர் ஆப்பை தற்போது வரை 85 பில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்பேம் அழைப்பு தொல்லைகளில் இந்தியா ஐந்தாவது இடம் வகிக்கிறது. இந்தியாவுக்கு முந்தைய இடங்களில் பிரேசில், பெரு, இந்தோனேஷியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் உள்ளன. பெருந்தொற்று காலங்களில் குறைந்திருந்த ஸ்பேம் அழைப்புகள் மீண்டும் பேக் டூ பார்மாக களை கட்டத் தொடங்கியுள்ளன. இவற்றைச் சமாளிக்க புதிய வழிகளும் உருவாகியுள்ளன. அவற்றுள் கூகுளின் வெரிஃபைடு கால்ஸ் வசதியும் ஒன்று.
பொதுவாக இன்று சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்றாலும் மொபைல் நம்பரை பில் போடும்போது கேட்பார்கள். அங்கு இரண்டு ஆப்சன்கள் மட்டுமே நமக்கு உண்டு. ஒன்று எண்ணைக் கொடுப்பது, அல்லது எண்ணைக் கொடுக்க மறுப்பது. எண்ணைக் கொடுத்தால் ஆபர்கள், தள்ளுபடிகள் பற்றிய செய்தி, அழைப்புகள் வர வாய்ப்புண்டு. இதனால் எண்ணைக் கொடுக்கும்போது கடைசி இலக்கங்களை மாற்றி சொல்லிவிடலாம். தொந்தரவு ஒழிந்தது.
அதற்கு சாமர்த்தியம் போதாதே என்பவர்கள், தூஸ்ரா நம்பர் என ஒரு சேவை ஆண்ட்ராய்ட், ஐஸ்டோரில் கிடைக்கிறது. இங்கு பணம் கட்டி விர்ச்சுவல் எண் ஒன்றை வாங்கினால் போனுக்கு வரும் ஸ்பேம் அழைப்புகளை எளிதாக தடுத்து விடலாம். கூகுள் வெளியிட்டுள்ள போன் ஆப்பில் வெரிஃபைடு கால்ஸ் மூலம் வணிக நிறுவனங்கள் பேசினால், எளிதாக தடுக்கலாம். அதனை அழைப்பின்போது வெரிஃபைடு கால்ஸ் ஆப் காட்டிவிடுகிறது. எனவே மன உளைச்சலின்றி வேலையைப் பார்க்கலாம்.

livemint
கருத்துகள்
கருத்துரையிடுக