டெக் நிறுவனத் தலைவர் இப்போது ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்! - ஶ்ரீதர் வேம்புவின் புதிய ஐடியா!
டெக் தலைவர் இப்போது ஆசிரியர்
ஜோஹோ கார்ப்பரேஷன் தலைவர் யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருநூறு கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனம் என இதனை போர்ப்ஸ் நிறுவனம் அட்டவணைப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குநர், அண்மையில் தனது நிறுவனத்தை தென்காசிக்கு மாற்றினார். கடந்த ஆண்டு இவர் செய்த இந்த மாற்றம், முக்கியமானது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் செலவுகளை குறைத்து வீட்டிலேயே பணி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவர் கொரானோ பாதிப்பிற்கு முன்னமே இந்த முயற்சியை செய்துவிட்டார்.
இப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியராகவும் மாறிவிட்டார். தென்காசியிலுள்ள மத்தாளம்பாறை கிராமத்திற்கு நிறுவனத்தை மாற்றியவர், குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கத் தொடங்கினார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதனை செய்யத் தொடங்கியவர், இப்போது நான்கு ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி 52 மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார். இம்மாணவர்கள் அனைவரும் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்தவர்கள்.
''நான் தொடங்கியுள்ள கல்வி ஸ்டார்ட்அப் இது. கல்வி,உணவு இலவசமாக கொடுத்து பாடங்களை சொல்லித்தருகிறோம். இதில் எந்த பட்டமும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு கற்பித்தலில் உள்ள ஆர்வத்தை வளர்க்கும் முயற்சி. இதற்கான அனுமதியை வாங்க முயன்று வருகிறோம் '' என்கிறார் ஶ்ரீதர் வேம்பு.
இந்த முயற்சி வேம்புக்கு புதிதான ஒன்றல்ல. ஜோஹோ கார்ப்பரேஷனில் இதற்கு முன்னரே 10,11,12 பள்ளியில் இடைநின்றவர்களை அழைத்து வந்து ஐடி பயிற்சி கொடுத்து அவர்களை தனது நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்தவர் இவர். இதற்காக தனது நிறுவனத்தில் ஜோஹோ பல்கலைக்கழகம் என்ற பிரிவை உருவாக்கினார். நகரத்தில் இம்முயற்சி செய்வது வேறு. ஆனால் கிராமத்தில் எப்படி?
மலிவானஸ்மார்ட்போன்கள், அதிலுள்ள இணைய வசதி என்று பயன்படுத்தி ஆன்லைனில் பல மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். வேம்பு நேரடியாக பயிற்சியளிக்க நினைத்தாலும் சூழல் அதற்கு உவப்பாக இல்லை. ஆனாலும் மனம்தளராமல் தனது பணிகளை செய்து வருகிறார். கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பித்து வருகிறார். தனது பள்ளியில் மாணவர்களுக்கு இருவேளை உணவு, மாலையில் ஸ்னாக்ஸ் ஆகியவற்றை வழங்குகிறார். எனது பள்ளிக்கு வருபவர்கள் ஏழ்மையில் உள்ளவர்கள். அவர்கள் இங்கு வரும்போது பசியோடு வந்தால், எதையும் கற்றுத்தரமுடியாது. மாநகரங்களில் சிறப்பான திட்டங்கள் உருவானாலும் கிராமங்களுக்கு வரும்போது அவரை நீர்த்துப்போய்விடுகின்றன. என்று கூறுகிறார்.
நிறைய விஷயங்களை நடைமுறையில் கற்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தேர்வு வைக்கும்போது அதில் அவர்கள் வெற்றி பெறுவதில்லை. ஒருவரின் வயது, அவருக்கு தெரிந்த விஷயங்கள் அடிப்படையில் அவர்களை பிரித்து கல்வி கற்றுத்தரப்ப்படுகிறது. ஶ்ரீதர் வேம்பு கிராமங்களில் தனது ஜோஹோ அலுவலகத்தை திறக்கும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளார். இதன்மூலம் மென்பொருள் பொறியாளர்களை அவர்களது ஊருக்கே திரும்பச் செய்து வருகிறார். ஒரு அலுவலகத்திற்கு நூறு பேர் வீதம் இருக்கும்படி அலுவலகங்களை கிராமத்தில் தொடங்கவேண்டும். நாங்கள் அப்படித்தான் 10 அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். கிராமத்தில் இதுபோல அலுவலகங்கள் அமைவது கிராமத்தை வளர்ச்சிக்கு கொண்டுசெல்லும் என்கிறார் ஶ்ரீதர் வேம்பு.
டீக்கடைகளில் மனிதர்களை சந்தித்துக்கொண்டு சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார் ஶ்ரீதர் வேம்பு. இவரது நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டு மதிப்பு 3,300 கோடி ரூபாய்.
கருத்துகள்
கருத்துரையிடுக