பல்வேறு மனிதர்களின் மனதிலுள்ள சாத்தான் வெளியே வந்தால்....? தி டெவில் ஆல் தி டைம்
தி டெவில் ஆல் தி டைம்
Directed by | Antonio Campos | ||
---|---|---|---|
Screenplay by |
| ||
Based on | The Devil All the Time by Donald Ray Pollock |
Music by |
|
---|---|
Cinematography | Lol Crawley |
இந்த படத்தை இறை நம்பிக்கை உள்ளவர்கள் பார்ப்பது அவர்களை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கும். படம் முழுக்கவே உளவியல் சார்ந்த பிரச்னை உள்ள மனிதர்களை முன்னிலைப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.
கதை நடைபெறும் இடம், அமெரிக்காவின் ஓஹியோ, மேற்கு வர்ஜீனியா. இந்த இரண்டு இடங்களுக்கும் கதாபாத்திரங்கள் மாறி மாறி சென்று தங்களுக்கான அனுபவங்களை பெறுகிறார்கள்.
இரண்டாம் உலகப்போர்வீரன், கணவன், மனைவி என இருவருமே சீரியல் கொலைகாரர்களாக இருப்பவர்கள், இளம்பெண்களை கடவுள் பெயர் சொல்லி செக்ஸ் வைத்துக்கொள்ளும் பாதிரியார், வெறிபிடித்த இறைப்பித்து பிடித்த பாதிரியார், அவரை அதற்காக காதலித்து மணக்கும் பெண் என இதில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் உளவியல் ரீதியாகவே பாதிக்கப்பட்ட நபர்கள்.
இரண்டாம் உலகப்போர் காலத்தில் நடைபெறும் கதை. இப்போரில் வில்லார்டு என்ற வீரன் பங்கேற்கிறான். அதில் ஜப்பானிய ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட வீரனைப் பார்த்து உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை சந்திக்கிறான். இந்த பாதிப்பு அவனுக்கு இறுதிவரை நீங்காமல் இருக்கிறது. அவன் ஹோட்டலில் டூநட் வாங்கி சாப்பிடும்போது தனது எதிர்கால மனைவியைப் பார்க்கிறான். அவளையே திருமணம் செய்துகொள்கிறான்.
எனவே வாழ்க்கையை அம்மா, மாமாவின் ஆசியோடு ஓஹியோவின் நாக்ஸ்மித் பகுதியில் தொடங்குகிறார்கள். வாடகை வீடுதான். அதை சொந்தமாக வாங்க கூட பணம் கிடையாது. கிடைக்கும் வேலையை செய்துகொண்டு வாழ்கிறார்கள். வில்லார்டுக்கு மகன் ஆர்வின் பிறக்கிறான். இதில் மகிழ்ச்சியாக இருப்பது வில்லார்டின் மனைவிதான். அவளுக்கும் புற்றுநோய் பாதிப்பு வர, வில்லார்டின் மனநிலை முற்றிலுமாக சீர்குலைகிறது. மனைவியை குணப்படுத்த கையில் காசில்லாத நிலையில் மகனின் செல்ல நாயைக் கொன்றே இறைவனின் ஆசியைப் பெற முடியும் என நம்புகிறான். இப்படி வளரும் ஆர்வின், தந்தை இறந்தபிறகு மாமாவின் வீட்டுக்கு வருகிறான்.
அங்கு ஹெலன் என்ற பெண்ணின் மகள் லெனோரா வளர்கிறாள். அவளை தன் உடன்பிறந்த தங்கையாகவே ஆர்வின் நினைக்கிறான். அவளை கிண்டல் செய்தவர்களை நேரம் பார்த்து நையப்புடைக்கிறான். லெனோரா, அவள் தாய் ஹெலன் போலவே வெறித்தனமான இறைப்பித்து கொண்டவள். அதுவே அவளது வாழ்வை நாசமாக்குகிறது. படத்தில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் குறுக்கும் நெடுக்குமான வாழ்வின் புதிரான கட்டங்களில் அடிக்கடி சந்திக்கிறார்கள், மோதிக்கொள்கிறார்கள்.
படம் முழுக்கவே செபியா டோன் போன்ற ஒளியமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே ஏழைகள், எளியவர்கள் என்பதால், அது பொருத்தமாகவே இருக்கிறது.
சர்ச்சில் உள்ள பாதிரியார்கள் பெண்களை கற்பழிப்பது, பைத்திய மனநிலை கொண்டவர்கள் போல காட்டப்படுவது சிலருக்கு உறுத்தலாக இருக்கலாம். ஒருவர் மனதிலுள்ள கொடூரமான பக்கம் வெளியே வந்தால், அது எத்தனை பேர்களின் வாழ்க்கையை பலியாக்குகிறது என்பதுதான் படத்தின் மையம் எனலாம்.
இதில் வரும் அனைவரும் ஏதோ ஒரு விஷயத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள். வில்லார்டுக்கு சக தோழனின் மரணம், ஆர்வினுக்கு தங்கை, ஹெலனின் கணவர் ராய்க்கு கடவுள், பாதிரியார் பிரெஸ்டனுக்கு செக்ஸ், ஹெலன், அவளது மகள் லெனோராவுக்கு இறைப்பித்து, கார்ல், சாண்டி இருவருக்கும் புகைப்படம், செக்ஸ், கொலை ஆகியவற்றின் மீது தீராத பித்து.
படத்தில் ஸ்வீடன், ரோம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல நாட்டு நடிகர்கள் நடித்துள்ளனர்.
உனக்குள் ஒருவன்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக