அன்புக்கு உரியவர்களிடம் பேசுவதுதான் மனநலன் காக்கும் வழி! - குப்ரா சைத்
குப்ரா சைத்
வக்காலத்ஃபிரம் ஹோம் படப்பிடிப்பு எப்படிபோகிறது?
ஒரு நடிகையாளக இப்படி நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது. நாம் எப்போதும் வீடுகளை மறக்கமுடியாத மனிதர்களாகவே இருக்கிறோம். இப்படி நடிப்பது உண்மையில் வித்தியாசமாக இருக்கிறது. இந்த முயற்சி எனக்கு தினமும் பல்வேறு விஷயங்களைக் கற்க உதவுகிறது.
நீங்கள் கொரானோ காலத்தில் மனநலம் பற்றியும் பேசியுள்ளீர்கள்
நமது அன்புக்குரியவர்களை தொடர்புகொண்டு அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பேசுவது முக்கியம். இந்த நேரத்தில் சுசாந்த் சிங்கின் மரணம் தற்கொலையா, கொலையா என்ற விவாதம் அர்த்தமில்லாதது. இந்த நேரத்தை நாம் நமக்கும், அன்பிற்கும் உரியவர்களுக்கும் பயன்படுத்தலாம்.
ரியாவுக்கு ஊடகங்களில் நடந்த அனுபவம் பற்றி சொல்லியிருந்தீர்கள்.
எனது குடும்பம் நீ நடிகை, போராட்டக்காரி இல்லை என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள். ரியாவுக்கு ஊடகங்களில் நடந்த விஷயங்கள் பற்றி எனது அனுபவத்தை நான் பகிர்ந்திருந்தேன். அப்படி நடந்துகொண்டது நீதியல்ல. என் அனுபவத்தை சொல்வது தாண்டி வேறெதுவும் என்னால் கூற முடியாது என்பதே உண்மை.
நீங்கள் கதைகளை சொல்லுபவராகவும் உள்ளீர்கள். ஒரு நடிகையாக உங்களை உருவாக்கியதில் அதன் பங்கு என்ன?
எனது அனைத்து கதைகளும் சுய அனுபவம் சார்ந்ததே. அப்படியல்லாத விஷயங்களை கதையாக மாற்றாதே என ரோஷன் அப்பாஸ் எனக்கு கூறியிருந்தார். இல்லையென்றால் அந்த அனுபவம், உங்களைத் தாண்டி ரசிகர்களுக்கு செல்லாது. நடிகராக எப்போதும் எந்த கருத்து சார்பாகவும் நான் நிற்க கூடாது அப்படி நின்றால் அனைத்து கதாபாத்திரங்களையும் என்னால் ஏற்று நடிக்க முடியாது . அதற்கு நியாயம் செய்யமுடியாது.
இந்தியாடுடே
கருத்துகள்
கருத்துரையிடுக