பிடித்த விஷயம் பின்னாளில் தொழிலாக மாறியது!
அன்பரசு சண்முகம் மொழிபெயர்ப்பாளர் பிழைப்புக்கான தொழில்! மொழிபெயர்ப்பை பாடமாக பயின்றீர்களா? அப்படி பயின்றிருந்தாலும் சிறப்புதான். எனக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு, தமிழாக்கம் ஆகியவற்றை நான் சுயமாக கற்றவன். தாளில் எழுதி அதில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து மீண்டும் அத்தவறு நடக்காமல் பார்த்துக்கொண்டுதான் மின்னூல்களை எழுதி வருகிறேன். சுயமாக மொழிபெயர்ப்பை கற்கும் முயற்சியில் வெளியில் இருந்தும் சிலர் உதவி புரிந்தனர். என்னுடைய மொழிபெயர்ப்புகள் புனைவல்ல(சிறுகதை, கவிதை, நாவல்). கட்டுரைகள் சார்ந்தது. அபுனைவு. அதுவே பின்னாளில் பிழைப்புக்கான தொழிலானது. இது பலமா, பலவீனமா என்றால் இரண்டுமே உள்ளது. இதற்கான தொடக்கம் எது? நெ.2 இதழான குமுதம் வார இதழ்தான். இளமை புதுமை முதன்மை என ஏகத்துக்கும் புதுமை செய்யும் இதழ் இன்றைக்கு வாராவாரம் பக்க எண்களை மட்டும் மாற்றிப்போடும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், அன்றைக்கு வார இதழ் தனது கதைகள், சிறுகதைகள், பேட்டி என அனைத்திலும் அவர்களின் கேப்ஷனுக்கு ஏற்றாற்போலவே புதுமையாக இருந்தது. குமுதம் இதழின் அட்டையைப் பார்த்த...