காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது! - அரசியல் கட்சிகளின் வருமானம்

 

 

 

 

 


 


காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!

இந்தியாவில் தேர்தல் நன்கொடைகளை கட்சிகள் பெறுவது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கென வலதுசாரி மதவாத ஆளும்கட்சி, தனியாக சட்டம் ஒன்றை உருவாக்கியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பயன்களைப் பெற்றது. அதே சட்டங்களை பிற கட்சிகளும் பயன்படுத்தின. மதவாத ஆளும்கட்சி, இன்னும் சற்று மேலே போய் நிதி அளிப்பவர்களை, தொழில் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, தேசிய புலனாய்வு முகமை வைத்து மிரட்டி பேரளவிலான நிதியைப் பெற்றது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஒரு பார்முலா உருவானது போல, ரெய்டு நடந்த சில வார, மாதங்களில் கட்சிக்கு நிதி வரவு அதிகரித்தது. இதைப்பற்றிய உண்மையான செய்திகளை அறிய நியூஸ்மினிட், நியூஸ் லாண்ட்ரி, தி வயர், கேரவன் ஆகிய ஊடகங்களை அணுகலாம்.

தேர்தல் பத்திரம் மூலம் பேரளவிலான நிதியை ஆளும் கட்சி திரட்டியபிறகு, அதுவரை மீளாத உறக்கத்திலிருந்த நீதிமன்றம் எழுந்தது. தேர்தல் பத்திரம் அச்சிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சன்டிவி சீரியல் திருப்பங்களை விட நகைச்சுவையானது. இரண்டு தேர்தல்களை தனியாக நின்று நடத்தும் அளவுக்கு ஆளும் கட்சியிடம் பணம் இருந்தது. எனவே,தேர்தல் நன்கொடை தொடர்பான சட்டம் பற்றியெல்லாம் அக்கட்சி கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. யார் அதிக நிதிபெற்றது என கட்சிகளின் ஐடி செல் அவதூறு சேற்றை பிறரது மீது ஒருவருக்கொருவர் அள்ளி வீசத் தொடங்கின. தேசியத்தை விட்டுவிட்டு பிராந்திய அளவுக்கு வருவோம்.  

இப்போது பிராந்திய கட்சிகளின் வருமானக் கணக்கைப் பார்ப்போம்.

டாப் 5 வருமானப்பட்டியலில் பாரதீய ராஷ்டிர சமிதி, அனைத்திந்திய திருணாமூல் காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

வருமானம்

பிஆர்எஸ் - 42.38%

ஏஐடிசி - 19.16%
டிஎம்கே -12.32%
பிஜேடி - 10.40%
ஒய்எஸ்ஆர்சி -4.30%
பிற கட்சிகள் - 11.44%

மொத்தமாக ஐந்து கட்சிகளின் வருமானம் மட்டுமே 1,541.328 கோடியாக உள்ளது. 88.56 சதவீதம்.

நாட்டிலுள்ள 39 பிராந்தியக் கட்சிகளின் வருமானம் 1522.46 கோடி. இத்தொகை தேர்தல் பத்திரம், தன்னார்வ பங்களிப்பு, நன்கொடை மூலமாக கிடைத்தவை.

தன்னார்வ பங்களிப்பு மூலமாக கட்சிகள் 73.88 சதவீத நிதியைப் பெற்றன. தேர்தல் பத்திரங்கள் மூலமாக 1,285.83 கோடி ரூபாயைப் பெற்றன.  நன்கொடை, பங்களிப்பு வழியாக 236.64 கோடி ரூபாயைப் பெற்றன.

பிற ஆதாரங்கள் வழியாக 218.02 கோடியைப் பெற்றுள்ளன.

மொத்த வருமானத்தில் இருந்து வட்டி வருமானமாக 155.39 கோடி ரூபாயைப் பெற்றுள்ளன.

2022-2023 காலகட்டத்தில் பிஆர்எஸ் கட்சி 737.68 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. இது அனைத்து கட்சிகள் பெற்ற வருமானத்தில் 42.38 சதவீதமாகும். இதற்கடுத்த இடத்தில் ஏஐடிசி 333.457 கோடி ரூபாய், டிஎம்கே 214.353 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளன. இருபது கட்சிகளின் வருமானம் அதிகரித்துள்ள அதே நேரத்தில், பதினேழு கட்சிகளின் வருமானம் குறைந்தும் போயுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - அசோசியேஷன் ஆஃப் டெமோகிராடிக் ரீஃபார்ம்ஸ்

#regional party #politics #dmk #aitc #income #source #interest income #voluntary contributions #donations #electoral bonds #political parties #brs #association of democartic reforms #tnie #spend #expenditure

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்