தன்னை முன்னேற்றிக்கொண்டு சமூகத்திற்கும் பங்களிக்க கல்வி அவசியம்!















நீண்ட கால நோக்கில் நாட்டின் மேம்பாட்டிற்கு கல்வியே அடித்தளமானது. இதன் வழியாக நமது கலாசாரம், அறிவை மனித குலத்திற்கு கொண்டு சென்று சேர்க்கலாம். புதிய தலைமுறையை சிறப்பாக வளர்த்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை முறையை உருவாக்கித் தரவேண்டும்.




ஐ.நா சபை, முன்னெடுத்துள்ள கல்வித் திட்டத்தை சீனா தொடர்ந்து ஆதரிக்கும். 260 மில்லியன் மாணவர்கள், 15 மில்லியன் ஆசிரியர்கள் உள்ள சீனாவில் கல்வியை மேம்படுத்துவது என்பது பெரும் சவாலான பணி.




நாட்டை அறிவியல், கல்வி வழியாக புத்துயிர்ப்பு செய்ய முடிவெடுத்து இயங்கி வருகிறது. அரசு, கல்விக்கு எப்போதும் முன்னுரிமை கொடுத்து இயங்கி வந்துள்ளது. கல்விக்கு முதலீடு செய்வதோடு, சர்வதேச தரம் கொண்ட, வாழ்க்கை முழுமைக்குமான கல்வியை வழங்குவதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதன் விளைவாக கல்வியில், கற்பதில் ஆர்வம் கொண்ட அறிவுசார்ந்த சமூகத்தை உருவாக்க முயன்று வருகிறது.




நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சிறுவர், சிறுமிகள் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர கடுமையாக உழைத்து வருகிறது. 1.3 பில்லியன் மக்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி, அவர்கள் தம்மை தாமே மேம்படுத்திக்கொள்ளவும், சமூகத்திற்கு பங்களிக்கவும், பிறருக்கு உதவி செய்யவும் வேண்டும்.




சீன அரசு, பிற நாடுகளுடன் கல்வி சார்ந்த பரிமாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளது. இதன் வழியாக நாட்டின் கல்விப்பரப்பு விரிவாகிறது. வளரும் நாடுகளுக்கு கல்வியில் மேம்பாடு அடையவும் உதவிகள் வழங்கப்படுகிறது. ஒளிமயமான எதிர்காலத்திற்காக பிற உலக நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் ஒன்றாக இணைந்து உழைத்து வருகிறோம்.







ஐ.நா சர்வதேச கல்வி திட்டத்திற்காக காணொலி வடிவில் ஆற்றிய உரை

செப்டம்பர் 25, 2013










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்