முக்கிய பிரச்னைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதைக் கற்பது அவசியம்! - ஷி ச்சின்பிங்















சீனாவின் பரந்து விரிந்த நிங்டே பகுதிகள், சந்தைக்கு ஏற்றபடி வலிமையானவையாக மாற வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், தற்போதைய நிலையில் அவற்றை பலவீனமாக உள்ள பறவை என்றுதான் குறிப்பிட வேண்டும்.




கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தல்படி, கடந்த ஜூன் மாதம் நிங்டேவுக்கு வந்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்த மாதங்களில் எனது சக பணியாளர்களும் வந்து இணைந்துகொண்டனர். தெற்குப்பகுதியில் உள்ள ஸெஜியாங் பகுதியில் உள்ள வென்சூ, கங்க்னன், யூகிங் ஆகிய நிங்டேவின் அண்டைப் பகுதிகளுக்கு சென்று குழுவாக பார்வையிட்டோம்.




எல்லையற்ற கடலில் மீனை வாழச்செய்வது, பரந்து விரிந்த ஆகாயத்தில் பறவையை பறக்க வைப்பது என்பது போன்ற செயல்தான் இதுவும். வறுமை ஒழிப்பிற்காக பல்வேறு திட்டங்களை யோசித்தோம். நிங்டேவின் பொருளாதாரத்தை உயர்த்தி அதை சிறப்பாக இயங்க வைப்பது எப்படி என அனைவரும் கலந்துரையாடினோம்.




நிங்டே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதி. அதுவே தனி உலகம் போல இருந்ததால் உலகிடமிருந்து செய்திகள் ஏதும் அங்கு பெரிதாக வரவில்லை. அங்கு, அதைப்பற்றி கவலையே இல்லாமல் தினசரி பணிகள் நடந்து வந்தன. ஆனால், அங்குள்ள சந்தை பின்தங்கியதாக இருந்தது. பழைய, தொன்மையான சிறுபான்மையினம், தொலைதூரத்தில் இருந்த பகுதி, தீவு, முன்னேற்றங்கள் இல்லாத பகுதி என நிங்டேவை சில வார்த்தைகளில் வரையறை செய்யலாம்.




வறுமையில் அமைதியை தேடுகிறோம். அரசின் மானிய உதவிகளுக்காக காத்திருக்கிறோம். தன்னைத் தவிர பிறர் அனைவரையும் புகார் கூறுவது என நிங்டே பற்றி எழுந்த அனைத்து வாதங்களும் குப்பையில் எறிய வேண்டியவை என உறுதியாக நம்பினேன்.




வறுமையில் இருப்பவர்களை பணக்காரர்களாக உயர்த்துவது, பலவீனமான பறவையை முதலில் பறக்கச்செய்வது என்பதை உறுதியான மனதில் பதித்துக்கொள்ள வேண்டும். கட்சி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தங்களது சிந்தனையை மேம்படுத்திக்கொண்டு நம்மால் பலவீனமான பறவையை பறக்க வைக்க முடியும்.




வறுமையில் இருப்பவர்களை பணக்காரர்களாக உயர்த்த முடியும் என நம்பிக்கை வைக்க வேண்டும். மக்களிடம் இந்த நம்பிக்கையை பிரசாரம் செய்யவேண்டும். இதன் விளைவாக நம் கண் முன் உள்ள பிரச்னையை நேர்மறையாக அணுக முடியும்.




வறுமை ஒழிப்பு பணிக்கு கூடுதல் நிதி, அடிப்படையான பொருட்கள் ஆகியவற்றை அரசு வழங்கவேண்டும் என நமது பணியாளர்கள் எதிர்பார்த்து வருகிறா்கள். இது தொன்மைக் காலத்தில் படைத்தளபதி ஹான் ஷின், அதிக படைவீரர்களை எதிர்பார்த்ததை நினைவுபடுத்துகிறது. பொதுவாக கூறவேண்டுமெனில் உங்களை ஒருவர் கண்காணித்து வருவது தவறு என்று கூறமுடியாது.




நிதி, பொருட்கள் என மற்ற விஷயங்களில் நம் கவனத்தை நகர்த்திக் கொண்டு இருக்க வேண்டியதில்லை. நமக்கு ஏற்படும் பிரச்னைகளை நாமே முழுமையாக தீர்த்துக்கொள்ள முயலவேண்டும்.




நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு பிறரிடம் பதில்களை எதிர்பார்த்துக்கொண்டு இருக்க கூடாது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுவதோடு, செலவுகளை குறைத்து சிக்கனமாக இருக்க முயலவேண்டும். உள்நாட்டில் நிலையான வலை அமைப்பை உள்நாட்டு நிறுவனங்களின் கூட்டுறவு மற்றும் வெளிநாட்டு முதலீடு மூலம் உருவாக்க வேண்டும். பின்தங்கிய பகுதிகளில் நிர்வாக கொள்கைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.




வறுமையால் பின்தங்கிய பகுதிகள் தங்களது முயற்சி, செயல்பாடு, பலம், கொள்கை மூலம் முன்னேற்றம் பெறச் செய்யலாம். குறிப்பிட்ட பகுதிகளை முன்னேற்றி மேலெழச் செய்துவிட்டு மற்ற பகுதிகளின் மீது கவனம் செலுத்தலாம். நாட்டின் முக்கியமான மின்னணு தயாரிப்பு நிறுவனங்கள், பெருநகரங்களில் இயங்கி வருகின்றன. அவை, அங்கு பொருளாதார மண்டலத்தில் சிறப்பாக இயங்குகிறார்கள். ஆனால், அதில், எதிர்பார்த்த பயன்பெறமுடியாமல் தடுமாறி வருகிறார்கள்.




பின்தங்கியுள்ள ஷியாபு பகுதியில் மின்சாரத்தில் இயங்கும் மசாஜ் கருவிகள், மருத்துவக் கருவிகளை தயாரிக்கிறார்கள். இதை பெரும்பாலும் ஆண்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பொருட்களுக்கு சீனாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வரவேற்பும், புகழும் உள்ளது.




மேற்கண்ட செய்தியை வைத்து பெருநகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள வசதிகள் ஷியாபுவில் உள்ளன என்று கூறிவிட முடியாது. வறுமையில் உள்ளதால்தான் கருவிகளை சிறப்பாக உற்பத்தி செய்ய முடிகிறது என்று புதிய கோணத்தில் வாதிடவும் முடியாது.




பின்தங்கிய பகுதிகளை முன்னேற்றுவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் வெறுமனே பேசிக்கொண்டிருந்தால், எந்த மாற்றங்களும் நடந்துவிடாது. அடிப்படையான கருத்துகளைப் புரிந்துகொண்டு செயல்படுத்தவில்லையென்றால் பொருளாதாரம் போட்டித்தன்மை கொண்டு வளராமல் தட்டையாகவே இருக்கும்.




கம்யூனிஸ்ட் கட்சியின் பதினோராவது மாநாட்டில் கட்சியின் செயல்பாடு பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு இருக்கவேண்டும் என முடிவுகள் எடுக்கப்பட்டது. பொருளாதாரத்தை முற்றிலுமாக அரசியலிலிருந்து பிரிக்க முடியாது என்பதே நடைமுறை உண்மை. ஆனால் நமது கட்சியிலுள்ள சக பணியாளர்கள், தங்கள் கண்முன் உள்ள உண்மையைப் பார்க்காதது போலவே இயங்கி வருகிறார்கள்.




இப்படியான மனநிலை கொண்டவர்கள், தங்கள் கண்முன் உள்ள பிரச்னைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது, எதை இரண்டாவதாக பிரித்து வைத்துக்கொண்டு தீர்ப்பது என தடுமாறி வருகிறார்கள்.




வறுமை ஒழிப்பிலுள்ள பணியாளர்கள், பொருளாதார முன்னேற்றமில்லாத வேலைகள் தங்கள் உழைப்பை ஆற்றலை அதிகம் உறிஞ்சுவதாக கருத்துகளைக் கூறினார்கள். எனவே, அதுபோன்ற செயல்களை நாம் உடனே நிறுத்தியாக வேண்டு்ம். நமது நேரத்தையும், ஆற்றலையும் பொருளதார முன்னேற்றம் நோக்கித்தான் குவித்து இயங்க வேண்டும்.




கடல்பகுதியான குவாங்டாங்கில் வறுமை ஒழிப்பை பணியைத் தொடங்கினோம். அதில், கிடைத்த முடிவுகள் நம்பிக்கை தருவதாக உள்ளன. வறுமையான பின்தங்கிய குவாங்டாங் பகுதி விரைவில் வளர்ச்சி பெற்று பறவை போல வானில் பறக்கும் என நம்புகிறேன். தாங்கள் செய்யும் செயல்மீது தீவிர வேட்கை கொள்பவர்கள் நிச்சயம் அதை வென்று காட்டுவார்கள்.


வறுமை ஒழிப்பு அனுபவங்கள்

சீன அதிபர் ஷி ச்சின்பிங்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்