தூக்கத்தைப் பாதிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு! - என்ன செய்யலாம்?

 

 

 


 


தூக்கத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன்

போன்களை எந்த நேரத்தில் பயன்படுத்துவது என்பதை வரையறை செய்துகொள்ளலாம். இதற்கென ஆப்கள் சந்தையில் கிடைக்கின்றன.

போனைப் பயன்படுத்தும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில உடற்பயிற்சிகளை செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

அளவுக்கு அதிகமாக நேரம் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஏராளமான கட்டுரைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றை வாசித்து நிலைமையைப் புரிந்துகொள்ளலாம்.

ஸ்மார்ட்போன்களில் வெல்பீயிங் என்ற வசதியை கூகுள் வழங்குகிறது. அதை சோதித்தால் எவ்வளவு நேரம் எந்த ஆப்பை பயன்படுத்தினோம் என்ற தகவலைப் பெறலாம்.

போனை அணைத்துவைத்துவிட்டு குடும்பத்தோடு நேரத்தை செலவிடுங்கள் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழே விளம்பரம் செய்து வருகிறது. உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம். வீட்டு வேலைகளைச் செய்யலாம்.

இனி தூக்கம் பற்றி

அறையை இருட்டாக்கி, அமைதியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால் போதும். சற்று குளுமையாக இருப்பது கூடுதல் நன்மை தரும். அப்போது தூக்கம் வருவது எளிதாக இருக்கும்.

தூங்கும்போது, சற்று முன்னதாக படுக்கைக்கு வந்து உடலை நீட்டி நெகிழ்த்தி தியானம் செய்யலாம். இதனால் உடல் தூக்கத்திற்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை கொள்ளும்.

டீ, காபி குடிப்பதை வரம்பிற்குள் கொண்டு வந்துவிட்டு, வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டால் தூக்கம் கூப்பிட்டவுடன் வந்துவிடும். பகலில் மதிய நேரத் தூக்கத்தைத் தவிர்த்தால் இரவில் தூங்குவதற்கு வசதியாக இருக்கும்.


இரண்டு போன்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகமாகிவிட்டனர். போன்களைப் பயன்படுத்தியபடியே, ஓடிடியில் படங்களை மாற்றிக்கொண்டே இருக்கிற காட்சிகளை பார்ப்பது அதிசயமானதில்லை. இரண்டு போன்கள், டிவி திரை என எதில் கவனம் இருக்கிறது என்று யாரும் கூறமுடியாது. அப்படியே கவனம் மாறி மாறி வரக்கூடும். போனின் நீலநிறத்திரை ஒருவரின் உடலில் உள்ள மெலடோனின் ஹார்மோனைக் குறைத்துவிடுகிறது. இதனால்தான், கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என பல டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு மெல்ல தூக்கத்தின் தரம் குறையும். சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு தூக்கத்தின் தரம் குறைந்து பகலில் சோர்வாக இருப்பதற்கு, உடலில் ஏற்படும் வேதிமாற்றங்களே காரணம்.

வீடியோக்களைப் பார்ப்பதற்கு பதில் ஆடியோ பாட்காஸ்ட், ஆடியோ நூல்களைக் கேட்க முயலலாம். தூங்குவதற்கு முப்பது அல்லது ஒருமணிநேரம் முன்னதாகவே ஸ்மார்ட்போனை, டிவி திரையை அணைத்துவிடுவது நல்லது. இந்த பழக்கம் உங்களுக்கு தானாகவரவில்லையா, கூகுளில் வெல்பீயிங் என்ற வசதி இருக்கிறது. அதை ஆன் செய்தாலே, தூங்கும் நேரம் வரையறை ஆகிவிடும். போனின் திரையும் கருப்பு வெள்ளைக்கு மாறிவிடும். இதை அடையாளம் கண்டு அடுத்தநாளை சிறப்பாகத் தொடங்க நீங்கள் தூங்குவதற்கு செல்லலாம்.

அலுவலக வேலையில் உள்ளவர்களை சில சாடிஸ்டுகள் அடிமைகளாக போனில் அழைத்து, குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்வார்கள். அவர்களைத் தவிர்க்க ஏர்பிளேன் மோட், டுநாட் டிஸ்டர்ப் வசதிகளைப் பயன்படுத்தலாம். சைக்கோ யெதவாக்களைத் தவிர்த்து நலமாக வாழ நினைத்தால் வேறு வேலையைத் தேட முயலுங்கள். தூக்கமின்மை உடல்பருமன், இதயநோய்களைக் கொண்டுவரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சுபாங்கி ஷா - ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
தமிழாக்க கட்டுரை

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்