181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்!

 

 

 

 




 



181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்!


இதன் செயல்பாட்டைப் பார்ப்போம்.

ஒருவர் உதவி தேடி 181 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ அங்கு அழைப்பு திசைதிருப்பப்படும். இப்படியான மாவட்ட மையத்தை ஒன் ஸ்டாப் சென்டர் - ஓஎஸ்சி என்று அழைக்கிறார்கள்.

என்ன மாதிரியான பிரச்னை என்று கேட்டு, ஆள் உதவி தேவையெனில் குறிப்பிட்ட இடத்திற்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மீட்கப்படும் பெண்கள் உதவி மையத்தில் அல்லது மாநிலத்தில் உள்ள 33 பெண்கள் காப்பகத்தில் ஏதாவது ஒன்றில் சேர்க்கப்படுவார்கள்.

181 என்ற எண்ணில் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஆலோசனை, சட்டரீதியான உதவி, ஆதரவு, கல்வி உதவிகள், காவல்துறையினரின் தலையீடு தேவையிருந்தால் அதையும் பெறுகிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னார்வ அமைப்புகளின் உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள்.

2018ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 181 உதவி மையம் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமாக அழைப்புகளைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான திட்டங்கள் பற்றி அறிய நிறைய அழைப்புகள் வந்திருக்கின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான அழைப்புகள் பாலின வன்முறை சார்ந்து வந்துள்ளன. இப்படியான அழைப்புகளில் மீட்கப்பட்ட பெண்கள், உதவி மையங்களுக்கு அழைத்து வரப்பட்டு மனநல ஆலோசனை, மருத்துவ உதவிகளை வழங்குகின்றனர்.

தமிழ்நாட்டில் 181 மையங்களின் மொத்த எண்ணிக்கை 48. சென்னை, கோவை, மதுரை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் மையங்கள் உள்ளன. இங்கு சில மையங்களில் இரண்டு, அல்லது மூன்று ஷிப்ட் முறையில் பணியாளர்கள் இயங்குகிறார்கள்.

181 உதவி மையங்களில் பணியாற்றுபவர்கள், கல்லூரிகளில் சமூகப்பணி படிப்பை பாடமாக எடுத்து படிப்பவர்களை ஊக்கப்படுத்தி தங்களது பணியைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு 181 ஒஎஸ்சி மையத்தில் பணியும் வழங்குகிறார்கள். இப்படி அழைப்புகளை ஏற்று அழைப்பவரின் பெயர், வயது, இடம், என்ன தேவை என விவரங்களைக் கேட்டு காவல்துறை அல்லது உதவி மைய பணியாளர்களை அழைத்து பிரச்னையைக் கூறுவதே பணி. இதற்கு பணியாளர்களுக்கு மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

உதவி மையத்திற்கு அழைப்பவர்களின் குரலை உள்வாங்கி அவசர உதவிகளை அழைப்பு வந்த ஒரு மணிநேரத்தில் வழங்கவேண்டும். என்ன தேவை, ஆலோசனைகளை அழைப்பின் மூலமே வழங்க முடியுமா என்பதை உதவி மைய பணியாளர் கணிக்க வேண்டும். குடும்ப வன்முறை விவகாரத்தில், குடும்பநலத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்த வீடுகளுக்கு சென்று விசாரித்து, ஆண்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதுண்டு. ஆனால் தொடர்ந்து கணவர், மனைவியை அடித்து உதைத்தல், பேச்சு மூலம் துன்புறுத்துவது ஆகியவற்றை செய்தால், கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணை, மனநல மையத்திற்கு அனுப்பி மனநல ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

181 உதவி மையத்திற்கு பாலியல் அத்துமீறல், குடும்ப வன்முறை, முதியோர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அவசர உதவி வேண்டிய அழைப்புகள் வருகின்றன. இதில் குடும்ப வன்முறை சார்ந்த அழைப்புகள் 34 சதவீதம், பாலியல் அத்துமீறல் 10.4 சதவீதம், சட்டரீதியான பிரச்னைகள் 12 சதவீதம், பணியிட பாலியல் சீண்டல் 3 சதவீதம், அவசர உதவிகள் 3 சதவீதம் என உள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா
முஸ்கான் அஹ்மத்

தமிழாக்க கட்டுரை

#181 helpline #toi #women safety #emergency #rescue #harassment #domestic violence #tamilnadu #crime #osc #warrior #family welfare #outreach #legal aid #child marriage #abuse #internshio #social work

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்