சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன?

 

 

 

 


 

 

 

சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன?
மிஸ்டர் ரோனி

ஒரு திரைப்படத்தில் அல்லது கே டிராமாவில் குளிர்பானம், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனைக் காட்டி விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது இப்படி காட்டினால் அதை மக்கள் பின்பற்றுவார்கள் என நிறுவனத்தினர் நம்புகிறார்கள். இதை ஜேம்ஸ் விகாரி என்பவர், திரைப்படத்தின் வழியாக சோதித்து பார்த்தார். அதற்காக இவர் கொக்ககோலாவையும், சோளப்பொரியையும் கையில் எடுத்தார். படத்தில் மிகச்சில நொடிகளே வரும்படி கோலாவைக் காட்டினார். இதன்மூலம், கோலாவின் விற்பனையும், சோளப்பொரியும் விற்றுத் தீர்ந்தது. கோலா 18.1 சதவீதமும், சோளப்பொரி 57.5 சதவீதமும் விற்பனை கூடியதாக விகாரி தகவல் கூறினார்.

வெளிநாடுகளில் குளிர்பானம், சோளப்பொரி ஆகியவை சேர்த்தே காம்போவில் டிக்கெட்டோடு வாங்குவது விதியாக உள்ளது. இதை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் பிவிஆர் நிறுவனம், தற்போது திரையரங்கில் விற்கும் சோளப்பொரிகளை தனியாக கடைபோட்டு விற்க தொடங்கியுள்ளது. நொறுக்குத்தீனிக்கான வேட்கை மக்களிடையே அந்தளவு பெருகியுள்ளது. திரையரங்கில் தீனிகளை தின்பது என்பதே தனி சந்தையாக மாறி வருகிறது.

விகாரி கதைக்கு வருவோம். அன்று அவர் கூறியது தனது நிறுவனத்தின் விளம்பரத்திற்காகத்தான். ஒருவருக்கு தாகம் எடுக்கிறது. அப்போது அவர் கண்ணில் குடிநீர் விளம்பரம் படுகிறது. உடனே அவர் சென்று அக்வா என அச்சிடப்பட்டுள்ள குடிநீர் பாட்டிலை வாங்கிவிட மாட்டார். பிஸ்லரி குடிப்பவர், அதைத்தான் வாங்கி குடிக்கவேண்டுமென நினைப்பார். இதையேதான் கைண்ட்லி, அக்வாஃபீனா குடிநீர் ரசிகர்களும் பின்தொடர்வார்கள். விகாரி, தான் நினைத்தால் ஒருவரை உணவு உண்ண, குடிக்க தூண்ட முடியும் என்று கூறினார். ஆனால் அது தவறு என பின்னாளில் அறிவியலாளர்களால் நிரூபிக்கப்பட்டது.

பிட்ஸ்

கொக்ககோலா 1886ஆம்ஆண்டு தொடங்கி விற்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் கோகைன் கலந்து மருந்தாக விற்றது. பிறகு கோகோ இலையில கோகைன் வேதிப்பொருள் இருக்க, தனியாக கோகைன் எதற்கு என அதை பானத்தில் கலக்காமல் விற்கத் தொடங்கினர். இப்போதும் அதே நடைமுறை தொடர்கிறது.

கலோனல் ஜான் பாம்பர்டன் என்பவர், கோலாவைக் கண்டுபிடித்தார். ஒயின், கோகைன் என இரண்டையும் கலந்தே இதை தயாரித்து விற்றார். இதில் ஆல்கஹால் இல்லை என்று கூறி விற்பனை செய்யப்பட்டது.




 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்