நூல்களைத் திருத்தி செம்மையாக்க ஆசிரியர் தேவையில்லை - எடிடிரிக்ஸ் ஏஐ போதும்!

 

 

 





 

 

நூல்களை செம்மையாக்க எடிடிரிக்ஸ் ஏஐ போதும்!

ஓராண்டு செயற்கை நுண்ணறிவு புரோகிராமுக்கு உழைத்து கடந்த மே மாதம் 2024 அன்று தனது கண்டுபிடிப்பை எழுத்தாளர், ஆசிரியர் மேரு கோகலே வெளியிட்டிருக்கிறார். இவர், பெங்குவின் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் நூல்களை செம்மையாக்கம் செய்யும் பதிப்பக ஆசிரியராக பணிபுரிந்தவர். பத்திரிகையாளர்கள் எழுதும் கட்டுரைகள், நூல்கள் என அனைத்துமே நாளிதழ் அல்லது பதிப்பு நிறுவன ஆசிரியரால் பல்வேறு முறை திருத்தி எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு வெளியாகின்றன. இதில், திருத்தங்களை செய்யும் நூல் மேம்பட உழைக்கும் ஆசிரியர்கள் பெயர் பெரும்பாலும் வெளியிடப்படுவதில்லை. ஆங்கிலத்தில் ஆசிரியர்கள் பெயர்களை வெளியிடுகிறார்கள். தமிழில், அதுபோன்ற நடைமுறை குறைவு. உண்மையாக உழைக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமும் சரிவர வழங்கமாட்டார்கள். 




எடிடிரிக்ஸ் என்ற ஏஐ மூலம் எழுத்தாளர் ஒருவர், நூல்களை எளிதாக திருத்தி, பிழைகளை நீக்கிக்கொள்ள முடியும். உலகம் முழுவதுமே தொண்ணூறு சதவீத எழுத்தாளர்களுக்கு, அவர்களின் நூல்களை செம்மைப்படுத்தி திருத்தி தரும் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. அந்தக்குறையை எடிடிரிக்ஸ் நீக்கும் என அதை உருவாக்கிய மேரு கூறுகிறார். இந்த செயற்கை நுண்ணறிவு புரோகிராம் தற்போதைக்கு ஆங்கிலத்தில் கிடைக்கிறது. விரைவில் இந்திய மொழிகளில் மேம்படுத்தப்படவிருக்கிறது.

எடிடிரிக்ஸ் மூலம் நீங்களாக நூல்களை திருத்திக்கொள்ளலாம். இரண்டாவதாக அதையே முழுக்க திருத்தித் தரும்படி கோரலாம். இப்படி இந்த ஏஐயைப் பயன்படுத்தும்போது, சுயாதீன ஆசிரியர்கள், பல்வேறு நூல் பிரதிகளை வேகமாக தவறுகளே இல்லாமல் திருத்தி வழங்க முடியும். அவர்களின் சம்பளத்தையும் அதிகரித்து கேட்டுப் பெறலாம் என மேரு கருத்தைக் கொண்டிருக்கிறார்.

2022ஆம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை விட்டு விலகியபிறகு, இணையத்தில் ஆராய்ச்சி செய்து இணைய வடிவமைப்பு செய்யும் அசெர்னிட்டி என்ற நிறுவனத்தின் பொறியாளர்களிடம் கலந்துரையாடி, ஏஐ பற்றி கற்றிருக்கிறார். பிறகுதான் எடிடிரிக்ஸ் ஏஐ உருவாக்கம் நடைபெற்றிருக்கிறது. இலவசம், பணம் கட்டி திருத்தங்களை மேற்கொள்வது ஆகிய திட்டங்கள் இருக்கி்ன்றன. நூலைப் பற்றிய குறிப்பு, பிழைநீக்கம், கூறியதைக் கூறல், எழுதுவதற்கான திட்டம், அடுத்து என்ன எழுதவேண்டும் ஆகிய செயல்பாடுகளை ஏஐயையே வகுத்துக் கொடுக்கிறது.

பொதுவாக குறிப்பிட்ட பதிப்பகம் எழுத்தாளர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தால், அவரின் கையெழுத்துப் பிரதியை வாங்கி படித்துப் பார்த்து அதிலுள்ள நிறை குறைகளைக் கூறுவார்கள். மற்றபடி நூல் பற்றிய நல்லது அல்லது என எக்கருத்துகளையும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். அக்குறையை எடிடிரிக்ஸ் தீர்க்கிறது. ஒரு எழுத்தாளர் எழுதும் முறையை முழுமையாக புரிந்துகொண்டு அதற்கேற்ப பிழைகளை திருத்தி, செம்மையாக்கம் செய்கிறது. ஏஐ திருத்தம் செய்வதால், எழுத்தாளரின் பாணி மாறிப்போக வாய்ப்பு குறைவு.  

எழுத்துகளை சிறப்பாக செம்மை செய்யும் ஆசிரியர்கள் குறைந்து வரும் காலத்தில், எடிடிரிக்ஸ்  எழுத்தாளர்களுக்கு உற்சாகத்தை வழங்க வாய்ப்புள்ளது.


தமிழாக்க கட்டுரை
மூலக்கட்டுரை
ஃபிரன்ட்லைன் - கனிகா சர்மா

#editrix ai #penguin #publishing house # editor #ai #writer #freelance editor #remuneration #meru kohale #jaipur literaure #books #creativity #human


 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்