இடுகைகள்

ஏலியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சி்ம்பயோட்டிக் மிருகத்தை வைத்துக்கொண்டு வாழ நினைக்கும் விண்வெளி வீரனின் பரிதாப கதை! - ஸ்புட்னிக்

படம்
        ஸ்புட்னிக்   ஸ்புட்னிக்  Director: Egor Abramenko Writer(s): Oleg Malovichko, Andrei Zolotarev ரஷ்யாக்காரர்கள் எடுத்த ஏலியன் பற்றிய படம் வெனோம் படம் பார்த்திருப்பீர்கள். அதே கான்செப்ட்தான். விண்வெளிக்குச் சென்று பூமிக்கு திரும்புகிற வழியில் சிம்பயாட்டிக் உயிரி விண்கலனில் புட்போர்ட் அடித்து ஏறிவிடுகிறது. அது நாயகன் உடலில் புகுந்துகொள்கிறது. அவனது நண்பனைக் கொன்று தின்றுவிடுகிறது.  பூமியில் தரையிறங்குபவர்களில் நாயகனுக்கும் கூட படுகாயம் ஏற்படுகிறது. ஆனால் மருத்துவமனையில் அவரை சிகிச்சையளிக்கும்போது, இரண்டே நாட்களில் உடலின் காயங்கள் ஆறுகின்றன. எப்படி என அவரை சோதிக்கின்றனர். அவருக்குள் உள்ள வேற்று உயிரியை கண்டுபிடித்துவிடுகின்றனர. அதனை எப்படி சோதிக்கின்றனர், நாயகன் இப்பிரச்னையிலிருந்து மீண்டாரா என்பதுதான் கதை. இதில் முக்கியமான பாத்திரம் உளவியலாளராக நடித்துள்ள நாயகிக்குத்தான்( Oksana Akinshina ) அதிக முக்கியத்துவம் உள்ளது. ராணுவ ஆராய்ச்சி மையத்தில் நடக்கும் விஷயங்களை மெல்ல புரிந்துகொண்டு அதிர்ச்சியாவது, நாயகனை காப்பாற்ற பிரம்ம பிரயத்தன முயற்சிகளை செய்வது, இறுதியில் நாயகன் எடுக்கும் முட

மர்ம தேசம் ஏரியா 51! - டேட்டா

தெரிஞ்சுக்கோ! கனவு தேசம் ஏரியா 51 அண்மையில் ஃபேஸ்புக்கில் ’நெவடாவில் ஏரியா 51 பகுதிக்குச்சென்று போராடுவோம். அயலுலக வாசிகளை காணும்வரை இப்போராட்டம் நீடிக்கும்’ என ஃபேஸ்புக் கிண்டல்கள் வெடித்தன. அதுவரை என்னமோ நடக்குது என வேடிக்கை பார்த்த மக்களும் பேரணி நடக்குமோ என விவாதம் செய்யத் தொடங்கினர். அமெரிக்க அரசு, அப்படியெல்லாம் அங்கு எந்த ஆராய்ச்சியும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது. அவை பற்றிய சின்ன டேட்டாவைப் பார்ப்போம். அமெரிக்க அரசின் விமானத்துறை பயிற்சித்தளம்தான் ஏரியா 51. அதாவது அதில் அடங்கியுள்ள ஒரு பகுதி. இப்பகுதி கனெக்டிகட் மற்றும் டெலாவேர் பகுதிகளை விட பெரியது. ஏரியா 51 பற்றி ஃபேஸ்புக்கில் கருத்துப் பகிர்ந்து கிண்டல் செய்தவர்களின் எண்ணிக்கை 2.1 மில்லியன். ஏறத்தாழ இருபது லட்சத்திற்கும் அதிகம். அமெரிக்க அரசு, அயலுலகவாசிகளை வைத்து ஆராய்ச்சி செய்கிறது என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நம்பியது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இங்கு தயாரிக்கப்பட்ட யு2 விமானம் பறக்கும் தோராய வேகம் மணிக்கும் 692 கி.மீ. இந்த உளவு விமானம் 18,300 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 1864 ஆ