மர்ம தேசம் ஏரியா 51! - டேட்டா







தெரிஞ்சுக்கோ!


கனவு தேசம் ஏரியா 51

அண்மையில் ஃபேஸ்புக்கில் ’நெவடாவில் ஏரியா 51 பகுதிக்குச்சென்று போராடுவோம். அயலுலக வாசிகளை காணும்வரை இப்போராட்டம் நீடிக்கும்’ என ஃபேஸ்புக் கிண்டல்கள் வெடித்தன. அதுவரை என்னமோ நடக்குது என வேடிக்கை பார்த்த மக்களும் பேரணி நடக்குமோ என விவாதம் செய்யத் தொடங்கினர். அமெரிக்க அரசு, அப்படியெல்லாம் அங்கு எந்த ஆராய்ச்சியும் நடக்கவில்லை என்று கூறிவிட்டது. அவை பற்றிய சின்ன டேட்டாவைப் பார்ப்போம்.

அமெரிக்க அரசின் விமானத்துறை பயிற்சித்தளம்தான் ஏரியா 51. அதாவது அதில் அடங்கியுள்ள ஒரு பகுதி. இப்பகுதி கனெக்டிகட் மற்றும் டெலாவேர் பகுதிகளை விட பெரியது.

ஏரியா 51 பற்றி ஃபேஸ்புக்கில் கருத்துப் பகிர்ந்து கிண்டல் செய்தவர்களின் எண்ணிக்கை 2.1 மில்லியன். ஏறத்தாழ இருபது லட்சத்திற்கும் அதிகம்.

அமெரிக்க அரசு, அயலுலகவாசிகளை வைத்து ஆராய்ச்சி செய்கிறது என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நம்பியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இங்கு தயாரிக்கப்பட்ட யு2 விமானம் பறக்கும் தோராய வேகம் மணிக்கும் 692 கி.மீ.

இந்த உளவு விமானம் 18,300 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.

1864 ஆம் ஆண்டு பாப் குரூம் என்பவர் இங்கு சுரங்கம் அமைக்க முடிவு செய்தார்.

1955 ஆம் ஆண்டு ஏரியா 51 இடம், பல்வேறு உளவு விமானங்களை சோதித்துப் பார்க்க சரியான இடம் என முடிவு செய்தனர்.

1968 ஆம்ஆண்டு அமெரிக்க ரஷ்யாவின் மிக் 21 ரக விமானங்களை சேகரித்தது.

1984 ஆம் ஆண்டு விமானத்துறை 89 ஆயிரம் ஏக்கர் பொது நிலங்களை யாரும் அத்துமீறக்கூடாது என அறிவித்துவிட்டது. இப்பகுதி ஏரியா 51யைச்சுற்றியுள்ளது. 2007 ஆம் ஆண்டு ஏரியா 51 பகுதி பெருமளவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நன்றி: க்வார்ட்ஸ் 

பிரபலமான இடுகைகள்