கைவீசி நடக்கும் பழக்கம் தோன்றிய வரலாறு!
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
சாலையில் நடக்கும்போது கைவீசி நடக்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும்?
நம் ஊரில் திருமணமானவர்கள் கைவீசம்மா பாட்டு பாடி நடப்பது மிக குறைவு. காதலி சமேதராக எழுந்தருளி நண்பர்களுக்கு எரிச்சல் தரும் முருகேசன்களும், பழனிசாமிகளும் இப்படிச் செய்வது உண்டு. இதற்கான நதி மூலத்தை தேடினால் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் போக வேண்டும். நாம் தோன்றிய காலத்திலிருந்து கைவீசம்மா கைவீசு சமாச்சாரம் இருக்கிறது. பாருங்கள் இன்று கூட, ஒரு இளம்பெண் அதாவது நேசிக்கிற பெண், தன் கையைத் தொட்டால் என பயங்கர ஃபீலாகிற ஆண்கள் உண்டு.
. 2010 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஃப்ரீ பல்கலையைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோர்டு ப்ரூஜின், கைவீசும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கைவீசி நடப்பது கால்களின் வேகத்திற்கு இயல்பாக வரவேண்டும் என்பதால் உருவானது என்கிறார். கால்களை மாற்றிப்போட்டு நடக்கும்போது உருவாகும் விசையை கைகளை வீசி நடப்பது சமன்படுத்துகிறது என்பதுதான் விஷயம்.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்