சூழலைக் காப்பாற்றுவது பாஜக அரசுதான்!
மினி நேர்காணல்
பிரகாஷ் ஜாவேட்கர், சுற்றுச்சூழல் அமைச்சர்
பஞ்ச பூதங்களை காப்போம் என்று கூறினீர்கள். எப்படி?
நீரைக் காக்க ஜெய்சக்தி எனும் துறையைத் தொடங்கியுள்ளோம். உலக மக்கள் தொகையில் இந்தியர்கள் 17 சதவீதமும், விலங்குகள் உயிரினங்கள் அளவில் 20 சதவீதமும் உள்ளது. மழையில் இந்தியா 4 சதவீதம் மட்டுமே பெறுகிறது.
டெல்லியில் ஏற்படும் காற்று மாசு பிரச்னையைக் குறைக்க முயற்சித்து வருகிறோம். நிலங்களைப் பாதுகாக்க 50 ஆயிரம் கோடி ரூபாயை வழங்க உள்ளோம். பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து சூழலைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காற்றின் தரத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளாரே?
அவர் செய்யாத விஷயத்திற்கு புகழைத் தேடுகிறார். நாங்கள் இதுபற்றி சரியான புள்ளிவிவரங்களுடன் அறிக்கையை வெளியிடுவோம். அப்போது அவர் கூறிய பொய் வெட்டவெளிச்சமாகும்.
வெப்பமயமாதல் இந்தியாவை பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். நீங்கள் அதைப்பற்றி கவலைப்படவில்லையா?
ஆயிரம் ஆண்டுகளாக பூமி இதுபோல சூழலைச் சந்தித்து வருகிறது. நாம் உயிர்வாழவில்லையா? இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ப சூழல் திட்டங்களை நாங்கள் தீட்டியுள்ளோம். புலிகளின் எண்ணிக்கையை 77 சதவீதம் அதிகரித்துள்ளோம். இந்தியாவில் காண்டாமிருகங்கள் 2000 உள்ளதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
ஒற்றை முறையாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை விதிக்க மோடி திட்டமிட்டுள்ளாரா?
இல்லை. தடை என்று கூறவில்லை. அக்டோபர் 2 அன்று, பிளாஸ்டிக் மறுசுழற்சி பற்றி பிரதமர் பேசுகிறார். இதற்கான இயக்கமும் தொடங்கப்படும்.
நன்றி: இந்தியா டுடே