இன்பமா? துன்பமா? - பிஎடிஎஸ்எம்(BDSM) பற்றி ஒரு பார்வை
18 வயதிற்கு மேல் மட்டும்.... |
பிடிஎஸ்எம் என வலியை அனுபவிக்கும் கிளப்புகள் மேற்குலகில் உண்டு. இதனை ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே போன்ற படங்களிலும் காட்டியுள்ளனர். எ கேர்ள் வித் ட்ராகன் டாட்டூ போன்ற படத்தில் அழுத்தமாகவே அதனைச் சொல்லியிருப்பார்கள். ஆனால் சரியான வித த்தில் அல்ல. அதில் நிறைய விதிகள் உண்டு. பரஸ்பர உடன்பாட்டுடன்தான் அங்கு உறவு என்பது நிகழ்கிறது என பிடிஎஸ்எம் குழுக்கள் கூறுகின்றனர். உண்மை எதுவோ அதுபற்றி விஷயங்கள் பஸ்ஃபீட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள உள்ளன. அதில் சில விஷயங்கள் உங்களுக்காக.
பிடிஎஸ்எம் என்பதில் பல்வேறு வகைகள் உண்டு. இதில் ஒருவர் பாலுறவை விட அதனை அனுபவிக்கும் முறையை கவனமாக உருவாக்குவார். இது கைவிலங்குகள், முகமூடிகள், சாட்டை, கத்தி, கபடா என படுக்கை அறையில் ரணகள பொருட்களின் களஞ்சியங்களை வைத்து செக்ஸ் அனுபவிக்கும் மனநிலை.
பிஎடிஎஸ்எம் என்று டைப் செய்தாலே ரணகள வீடியோக்கள் கூகுளில் வரும். ஆனால் இது ஒரு உணர்வுநிலைதான். மசாஜ் போல. முழுக்க செக்ஸை நோக்கியதல்ல என்கிறார் பிடிஎஸ்எம் ஆய்வாளர் கிளாரிஸே தோர்ன்.
இது முழுக்க விதவிதமான பொருட்கள் இருப்பதால், ஆகா, செக்ஸ் அடிமை போன்ற கலாசாரம் என பலரும் பதற்றப்படுகின்றனர். ஆனால் இது அப்படியல்ல. பிடிஎஸ்எம் என்பது, இயல்பான மனிதர்கள் டைனமிக்கான வழிமுறைகளால் மகிழ்ச்சி பெறும் முறை என்கிறார் எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான மருத்துவர் குளோரியா பிராம். இவர் டிஃப்ரண்ட் லவ்விங் என்ற நூலை எழுதியுள்ளார்.
பிடிஎஸ்எம் உறவில் இருவருக்கிடையேயான ஒப்பந்தம் முக்கியமானது. ஒருவர் எப்போதும் மாஸ்டர் என்ற தகுதியில் இருக்கவேண்டியதில்லை. எனவே தம்பதிகள் இதனை உணர்ந்து பேசி, தங்களுக்கு விருப்பமான முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
இம்முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு பாலியல் வல்லுறவு போன்ற அனுபவம் நேராமல் இருந்தால் நல்லது. இல்லையெனில் அவர்களுக்கு அந்நினைவு மீள வரலாம். பிறருக்கு எந்தப்பிரச்னையுமில்லை. மேலும் இதில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்ததாக 2008 ஆம் ஆண்டு வெளியான ஜர்னல் ஆஃப் செக்சுவல் மெடிசின் இதழ் கூறுகிறது.
ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே படம் மிகை புனைவாக பிடிஎஸ்எம் குழுவினரைக் காட்டியுள்ளது என்று கூறுகின்றனர். இதில் பயன்படுத்தும் செயின், பெல்ட் உள்ளிட்டவை பரஸ்பர அனுமதியுடன்தான் ஏற்கப்படுகிறது. வலுக்கட்டாயமாக அல்ல.
பிடிஎஸ்எம் அனுபவத்திற்குப் பிறகு சிலர் பாலுறவு கொள்வதை சீன்ஸ் என்று அழைக்கின்றனர். இதற்கென தனி கிளப்புகள் இன்று செயல்பட்டு வருகின்றன. இதில் செயல்படுபவர்களை டாமினன்ட், சப்மிசிவ் என்று கூறலாம். சுருக்கமாக டாப்ஸ், பாட்டம். வலியை ஏற்படுத்துவர், அதனை அவரின் கட்டளைகளுக்கு கீழ்படிந்து பெறுபவர் என்று புரிந்துகொள்ளுங்கள்.
பிடிஎஸ்எம் கிளப்புகளில் இந்த விளையாட்டை மூர்க்கமாக எதிராளியைக் காயப்படுத்தி விளையாட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவது உறுதி. காரணம், அந்தளவு அங்கு கண்காணிப்பு உண்டு. பாதுகாப்பு, நல்ல மனநலம், பரஸ்பர ஒத்துழைப்பு என்பது இந்த உறவில் முக்கியம். ஐலைக் காமிக்ஸ்.காம் அல்லது ஆங்கில சினிமாக்களில் வருவது போல உறவு இங்கு அமையாது.
சாதாரண உறவை வெனிலா செக்ஸ் என்று குறிப்பிடுகின்றனர். அதை விட அதிகமாக பிடிஎஸ்எம் ஆட்கள் பேசுகிறார்கள். காரணம், நாம் என்னசெய்யவேண்டும் என தீர்மானிக்கவேண்டுமே அதற்காகத்தான்.
தகவல் - பஸ்ஃபீட் வலைத்தளம்