ஃபேஷன் உலகில் சாதித்த திறமைசாலி - மிஸ் ஜே
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள்
ஜே.அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர் ஜென்கின்ஸ், ஃபேஷன் உலகில் வெகு பிரபலமான ஆள். மிஸ் ஜே என்று அழைக்கப்படுவர், 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவின் டிவி உலகில் பல்வேறு மாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகிறார்.
அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸில் பிறந்தவருக்கு, ஃபேஷன் வழிகாட்டுதலை வழங்கியது யாரோ அல்ல; அவரது அம்மாதான்.
பின்னர் எலைட் மேனேஜ்மெண்ட நிறுவனத்தைச் சேர்ந்த மோனிக் பில்லார்டு ஜேவைப் பார்த்தார். அவரின் தோற்றத்தைப் பார்த்ததும் மாடலுக்கு சரியான ஆள் என முடிவு செய்தார். உடனே அக்ரிமெண்டை ரெடி செய்து கையில் கொடுத்துவிட்டார். அதன்பின் படிப்பை தூக்கிப்போட்டு மாடலிங்கில் குதித்தார் ஜே. வெற்றியும் பெற்றார்.
பின்னர்தான் டைரா பேங்க்ஸ் என்ற நடிகையின் நிகழ்ச்சியில் ஆலோசகரானார். அவருக்கு நிகழ்ச்சி பற்றிய பல்வேறு ஆலோசனைகளை கட்டண சேவையில் வழங்கினார். மேலும் டைரா ஷோ என்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். வெறும் ஆலோசனைகள் மட்டுமன்றி அமெரிக்கா நெக்ஸ்ட் மாடல் எனும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆடைகளையும் உருவாக்கினார். இவர் இங்கு இடம்பெறக் காரணம், தன் பாலினத்தை புகழ்பெற்றவராக இருக்கும்போதே ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டார். வெற்றிபெற்றவராக இருக்கிறார் என்பதற்காகத்தான்.
நன்றி: அவுட்.காம்.
தமிழில் - வின்சென்ட் காபோ