பொய் சொன்னால் போலீஸ் கண்டுபிடிப்பது இப்படித்தான்!
இந்துஸ்தான் டைம்ஸ் |
மிஸ்டர் ரோனி
பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?
உண்மையைச் சொல்லுங்க சார் என்று சொன்னால் எந்த குற்றவாளியும் தெரிந்த விஷயங்களை சொல்வதில்லை. எனவே குறைந்தபட்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளுமளவு சுதந்திரம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மாஜிஸ்டிரேட் கூட மாவுக்கட்டை பார்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாயா என்று கேட்பதில்லை. அவருக்கும் பழகி யிருக்கும். நாம் கூறப்போவது சற்று ஜென்டிலமேன் தனமான விசாரணை முறை.
இதில் இன்னொரு வகைதான் உண்மை கண்டறியும் சோதனை. இதில் நம் இதயத்துடிப்பு, கண்கள், நாடி என பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு டிமிக்கி கொடுக்கும் விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு ஜான் அகஸ்டஸ் லார்சன், லை டிடெக்டர் கருவியைக் கண்டுபிடித்தார்.
1. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தொடர்பான விவரங்களை முதலில் ஆராய்ந்து, கேள்விகளைத் தயாரிப்பார்கள். இக்கேள்வி முழுக்க குற்றம் சாட்டப்பட்டவரை பல்வேறு அடுக்குகளாக ஆராய்வதாக இருக்கும். ராபிட் ஃபயர் ரவுண்ட் போல கேள்விகளை எறிவார்கள்.
2. குற்றம் சாட்டப்பட்டவரின் மார்பின் மீது நியூமோகிராப் கருவி பொருத்தப்படும். இது காற்று நிரப்பப்பட்ட ட்யூப். பதில் சொல்லும்போது இதயத்தில் ஏற்படும் மாறுதல்களைப் பதிவு செய்வார்கள்.
3. அடுத்து உடலில் சுரக்கும் வியர்வையின் அளவு கணக்கீடு. நபரின் வலதுகை ஆட்காட்டி விரல், மோதிரவிரல் இரண்டிலும் கால்வானிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் என்ற கருவியை பொருத்துகிறார்கள். இது வியர்வை பெருகும் அளவைக் கணக்கிடுகிறது. எவ்வளவு மின்னோட்டத்தை கடத்துகிறது என்பதைப் பொறுத்து வியர்வை அளவு கணக்கிடப்படுகிறது.
4. உடலில் ரத்த அழுத்தம் இதில் முக்கியமானது. அதனையும் கணிக்கிறார்கள்.
நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்