டெக் புதுசு! - தோட்டப்பொருட்கள்
தோட்டப்பொருட்கள்
தி ஸ்மார்ட் கார்டன் 3
வீட்டுத்தோட்டம் என்பது சூரியன் பதிப்பகத்தில் புத்தகம் போடுவதற்கு முன்பே உலகறிந்த ஒன்று. எனவே அதற்கான டெக் சமாச்சாரங்களும் வராவிட்டால் எப்படி? அதற்கு உதவுவதுதான் ஸ்மார்ட் கார்டன். இதில் மண், லைட் என அனைத்துமே உள்ளது. இதன்மூலம் லாவண்டர் பூ முதல் கீரை வரை விதைத்து ஜமாய்க்கலாம். அடுத்த வீட்டுக்காரரை பொறாமைப்பட வைக்கலாம்.
விலை - 110 டாலர்கள்
கோ சன் கிரில்
சாதாரணமாக பீச்சுக்கு சுண்டல் வாங்கிக்கொண்டு சேட்ஜி செல்வரார்கள். அங்கே தின்றுமுடித்து பிக்னிக் சந்தோஷம் பெற்று வருவார்கள். அதேதான். இப்போது நம்முறை கோசன் கிரில் சூரிய சக்தி மூலம் இயங்கும் கருவி. இதில் காய்கறிகளை அவிக்கலாம், சுடலாம். பேக்கரி சமோசாக்களை இதில் வைத்து சுடச்சுட சாப்பிடலாம். சோறு வைத்து பருப்பு குழம்பு வைக்க முடியுமா என்று கேட்காதீர்கள். லைட்டான தீனி தின்பவர்களுக்கான கருவி இது.
விலை - 699 டாலர்கள்
ஃபைனல் ஸ்ட்ரா
பிளாஸ்டிக் ஸ்ட்ராதானே சூழலுக்கு பிரச்னை. வாக்கிங் ஸ்டிக்கை மடிப்பதைப் போல இப்போது மெட்டல் ஸ்ட்ரா சந்தைக்கு வந்துள்ளது. வாங்கிப்போட்டு உறிஞ்சிக் குடியுங்கள். அல்லது காதலிக்கு கூட பரிசளிக்கலாம். காதல் வளர்கிறதோ இல்லையோ இதைக் கண்டுபிடித்தவர் செட்டிலாக வாய்ப்புள்ளது. எளிதாக மடித்து கீசெயினில் கோர்த்து வைத்துக்கொள்ளலாம். இதற்கு முன்னர் வெளியானதைவிட சற்றே நீளம் குறைவு. சூழல் காப்பான் என உங்களுக்கு பட்டம் கூட பேனரில் போட்டுக்கொள்ளலாம். தப்பில்லை.
விலை - 29 டாலர்கள்
நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்