மக்களை கறைபடிந்தவர்களாக்குவது அரசியல்வாதிகளின் தந்திரம் - சேட்டன் பகத்!
டெக்கன் கிரானிக்கல் |
ஊழலை ஒழிப்போம்!
நீங்கள் நிச்சயம் அரசு அலுவலகங்களுக்குச் சென்றிருக்கலாம். தன் வேலைகளுக்கு சம்பளமும் பெறுவார்கள். கூடவே லஞ்சமும் ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.இவர்களை நீங்கள் ஏன் இப்படி என்றால் இருக்கவே இருக்கிறது யூனியன்கள். தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள்.
நாம் சாப்பிடும்போதும், அல்லது சினிமா பார்க்கும்போதும், பூங்காவில் சந்திக்கும்போதும் பொது விஷயங்களை நண்பர்களுக்குள் பேசிக்கொள்கிறோம். அதில் ஊழல் மறுக்கமுடியாமல் ஒரு பகுதியாக இருக்கிறது. என்ன காரணம் என்றால் அரசியல்தான். தூய்மையான அரசியல் என்றால் உங்களது வீட்டு சிறுவன் கூட சிரிப்பான்.
அந்தளவு நிலைமை சீரழிய அரசியல் ஓர் முக்கியக் காரணம். மக்கள் எப்போது அரசியல்வாதியைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்? அவர்கள் தூய்மையாகவும் எதிராளி தூய்மையற்று இருக்கும்போதுதானே? அரசியல்வாதிகள் இதைத்தான் குறி வைக்கிறார்கள். மக்களுக்கு வாக்களிக்க பணம் கொடுப்பது முக்கியமானது. இனி எப்படி மக்கள் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் உயர்த்த முடியும்?
மக்களும் எப்படியும் வெற்றி பெறுபவர் தொகுதிக்கு வரப்போவதில்லை. குறைந்த பட்ச பணமேனும் கிடைக்கிறதே என வாங்கிக்கொள்கிறார். இதில் மக்களின் தவறும் உள்ளது. இன்று படித்த நடுத்தரவர்க்க மக்கள் இதைப்பற்றி என்ன கருத்து சொல்லுகிறார்கள். ஷிட் அறிவில்லாத மக்கள், 99 சதவீதம் முட்டாள்கள்தான் என திட்டுகிறார்கள். இதனை டிவி சேனல்களிலும் பத்திரிகைகளிலும் பார்க்கும்போதும் படிக்கும்போதும் எனக்கு மனம் துணுக்குறுகிறது.
இது முழு பொய்யுமல்ல. முழு உண்மையுமல்ல என்று நான் நினைக்கிறேன்.
இன்று ஊழல்வாதிகளைக் கூட மக்கள் பெரிதாக தாக்குவதில்லை. ஊழல்தானே செய்கிறார் என்ற நினைத்துக்கொண்டு எரிகிற கொள்ளிகளில் குறைந்த தணல் கொண்டதைத் தேர்ந்தெடுக்கிறார். அதன் விளைவை அனுபவிக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் பொதுவெளியில் ஊழலைப் பற்றிப் பேசுவதை விட ஒருவரின் அடையாளம், பாதுகாப்பு என்பதை முக்கியப்படுத்தி பேசுகிறார்கள். நாட்டின் நிலையும் அப்படி மாறிவிட்டதாக கூறி வாக்கு சேகரிக்கிறார்கள். இதில் முஸ்லீம்களும் தாழ்த்தப்பட்டவர்களும் நிச்சயம் பாஜகவிற்கு வாக்களிப்பது மிக கடினம். ஆனால் இலவசங்களுக்கு மயங்கிய கீழ்த்தட்டு மக்கள் காசு கொடுக்கும், மிக்ஸி கொடுக்கும் கட்சிகளுக்கு நேர்மையாக ஓட்டுபோடுகின்றன. ஏழைகளின் பங்காளனாக தன்னைக் காட்டிக்கொளும் கட்சி, எதிர்கட்சிகளை கொள்ளையராக ஊழல்வாதியாக காட்சிபடுத்துகிறது.
போலீஸ்துறையை இதற்கு பயன்படுத்துகிறது. ஊழல்களை அம்பலப்படுத்துகிறது. உண்மையில் ஆளுங்கட்சி பரிசுத்த கட்சியா என்றால் இல்லைதான். இது ஆளுங்கட்சிக்கும் தெரியும். எதிர்கட்சிக்கும் தெரியும். ராபின்ஹூட் போல ஏழைகளுக்கு கருப்பு பணத்தை எடுத்து தருகிறார். அதனை ஒழிக்கிறார். பணக்கார ர்களை எச்சரிக்கிறார் என்பதெல்லாம் சூப்பரான ஃபேன்டசி கற்பனைதான் வேறென்ன?
தங்களுக்கான சாதி பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தால் நாட்டில் பாலும் தேனும் ஓடும். வீட்டில் நாளை முதல் சோறு பொங்கிவிடும் என தாழ்த்தப்பட்ட மக்கள் நினைத்தால் அதை மாற்றிக்கொள்வது நல்லது. அப்படியொன்று எந்த நாட்டிலும் நடந்தது இல்லை. காரணம், மாற்றங்களை ஏற்படுத்தினால்தான் நடக்கும். மனதில் நினைத்தால் நடக்காது.
பார்சிகளைப் பாருங்கள். யூதர்களைப் பாருங்கள். உலகெங்கும் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகம்தான். இன்று தனித்தனி நபர்களாக பாருங்கள். தொழிலதிபர்களாக வங்கி நடத்துபவர்களாக வளர்ந்திருக்கிறார்கள். இந்திய சமூகங்கள், அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இலவசம் என்று அரசு உணவகங்களிலும் அலுவலங்களிலும் காத்துக் கிடந்தது போதும். காந்தி கூறும் சுயராஜ்ஜியம் கூட அரசை நம்பி மக்கள் காத்து கிடப்பதற்கு சுதந்திரம் பெறவேண்டிய அவசியம் என்ன என்று திட்டுகிறார்.
மாற்றங்களை மனதில் தொடங்குங்கள். அவைதான் நாளை உங்கள் செயல்கள் வழியாக பிறருக்கும் பரவும் தொடங்குவோமா?
சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூல் கட்டுரையைத் தழுவியது.