சர்க்கரையால் சத்தம் குறையுமா?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
சர்க்கரை கலக்கும்போது, ஸ்பூனில் எழும் சத்தம் குறைவாக இருக்கிறதே ஏன்?
அநேகமாக நீங்கள் தனியாக காபி சாப்பிடும் பேச்சிலராக இருப்பீர்கள என டவுட்டாகிறது எனக்கு. இதையெல்லாம் கவனித்து கேள்வி கேட்கத்தோன்றுகிறதே ப்பா. பிரமிப்பாக இருக்கிறது.
காபியில் ஏதும் கலக்காதபோது அங்கு ஒலிக்கு தடை ஏற்படுத்தும் பொருட்கள் ஏதுமில்லை. ஆனால் சர்க்கரை இதற்கு முதல் தடையாக வருகிறது. எனவே, சர்க்கரையற்ற டம்ளரில் ஸ்பூனால் கலக்கும்போது சத்தம் அதிகமாகவும், சர்க்கரை கலந்த கலக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது ஸ்பூன் டம்ளரில் மோதினால் ஒலி குறைவாக எழுகிறது.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்