விண்வெளி சாதனை செய்த ஓரினச்சேர்கையாளர்!





Image result for sally ride is a lesbian



மாற்றுப்பாலின சாதனையாளர்கள்


சாலி ரைட்


அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி வீரர். விண்கலன் இயக்குநர் என்ற பெருமை கொண்ட இவரால், பல நூறு பெண்கள் அறிவியல்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதையும் எங்கும் மறைக்கவில்லை. தன் பணியோடு தனிப்பட்ட வாழ்க்கையை தூரமாக வைத்திருந்தார். டாம் ஓ சானெசி என்ற பெண் துணையை  எழுத்துப்பணி, ஆராய்ச்சிப்பணி, குடும்பம் எங்கும் மறைக்காமல் இருந்தார். இருவரும் சேர்ந்து எழுதினர், ஆராய்ச்சி செய்தனர். சாலி ரைட் சயின்ஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் டாம்தான்.

சாலி, தன் வாழ்க்கையை பெரியளவு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அதேசமயம் தன்னை மறைத்துக்கொண்டு சாதனைகளை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் இல்லை. நாசாவில் அவர் முதல் பெண் ஆய்வாளராக பணிபுரிந்தார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது அங்கு தெரிந்த செய்தியாகவே இருந்தது என செய்தியைப் பகிர்கிறார் சாலி ரைட்டின் சுயசரிதையை எழுதிய எழுத்தாளரான லின் ஷெர். சாலி, கணையப் புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.

நன்றி: அவுட்.காம்
தமிழில்: வின்சென் காபோ


பிரபலமான இடுகைகள்