நிதானமான ஆவி! - பழிக்குப்பழியில் வருகிறது கொட்டாவி


Image result for கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள்



சௌபர்ணிகா - கோட்டயம் புஷ்பநாத்
தமிழில் - சிவன்
விலை - 65

சின்னத் திருமேனி ஸ்ரீகுமார், எலும்புக்கூடு ஒன்றை கல்லூரி லேபில் ஒன்று சேர்க்கிறார். இதன் விளைவாக சக்தி பெறும் ஆத்மா அவரை எதிரிகளை பழிவாங்க உதவக்கோருகிறது. அதற்கு அவர் இசைய, நேரும் பல்வேறு பிரச்னைகள், ஹோமங்கள், ஏவல்கள், பில்லி சூனியங்கள்தான் கதை.

முழுக்க யூ சர்டிபிகேட் கதை. ஸ்ரீதேவி எனும் பெண் சொத்துக்காக்க சந்து நாயரால் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க ஸ்ரீகுமாரைப் பயன்படுத்துகிறார். ஸ்ரீகுமார், நம்பூதிரி குடும்பம் என்றாலும் அவருக்கு மாந்த்ரீகத்தில் அனுபவமில்லை. எனவே, அவரின் குலதெய்வமான பகவதி தன் சக்தியை அவருக்கு கொடுத்து உதவுகிறாள். அது என்ன? அவரின் எதிரிகள் யார்? என்பதுதான் கதை.

காதல், செக்ஸ் இல்லாத கதை என்பதால் கதையில் பெரிய வேகம் இல்லை. எதிரிகளின் நோக்கம் சொத்து என்பது ஓகே. அதனைக் காப்பாற்றுபவருக்கு அதன் மீதான தீவிர மோகம் இல்லை என்பதால், கதை பாதியில் நொண்டியடிக்கிறது.

ஸ்ரீதேவியின் ஆவி கூட நாளைக்கு பழிவாங்கிக்கொள்ளலாம் என்று நிதானமாக இருப்பது கதையினை நீட்டிக்க என்றே புரிந்துகொள்ள முடிகிறது. சன்டிவியில் திகில் நேரத்தில் ஒளிபரப்பான கதை இது. வேகம் போதவில்லை. கோட்டயம் புஷ்பநாத்தின் எழுத்தில் வேகம் குறைந்த கதை.

நன்றி: பாபு பெ அகரம்