இடுகைகள்

மதவெறி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பன் பட்டர் ஜாம் 2 - இநூல் வெளியீடு

படம்
     சர்வாதிகார அரசுக்கு துணையாக நிற்பவர்கள் இடது, வலதுசாரி ஆட்கள் அல்ல. அரசு கூறும் செய்திகளை உண்மையா, பொய்யா என்று தெரியாமல் குழம்புபவர்கள், நம்புபவர்கள்தான். இம்மாத காலச்சுவட்டில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய கட்டுரையில் வரும் இறுதி பத்திவரிகள் இவை. இந்த இநூலுக்கும் பொருந்திப்போகிற ஒன்று.   https://open.substack.com/pub/anbarasushanmugam/p/2-40d?r=396v6&utm_campaign=post&utm_medium=web&showWelcomeOnShare=true

அன்பெனும் தானியம் இந்திய மண்மீது - இந்தியா 75 -

படம்
  வெறுப்பு எப்படி பரவுகிறது என்றால் தொடர்ச்சியாக நரம்பில் சலைன் ஏற்றுவது போல மெல்ல மெல்ல தினமொரு செய்தியைக் கொடுத்து வெறியேற்றுகிறார்கள். அண்மையில் கிறிஸ்துவ மிஷனரியில் படித்த நண்பரொருவர், தான் படித்த இடம், கற்ற விஷயங்களைக் கூட மறந்துவிட்டு வீரத்துறவியின் காவி உடையே கட்டுமளவு துணிந்துவிட்டார். கலாசாரம் மாறாமல் இருக்கவேண்டும், தன்னைத் தவிர பிறர் அனைவரும் கட்டாயம் நேர்மையாக இருக்கவேண்டும் என சத்தியம் தர்மம் மானம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுபவர்.  ஒருநாள் நான் இன்னொரு நண்பரிடம் மதமாற்றம் பற்றி பேசும்போது, திடீரென உள்ளே புகுந்தவர் கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே அதை செய்கிறார்கள். மக்களும் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு விலை போகிறார்கள் என்று சலித்துப்போய் கோபம் மேலிட பேசினார்.  நான் எனது விவாத நண்பரைப் பார்த்தேன்.அவர் புருவங்கள் சுருங்க வீரத்துறவி நண்பரைப் பார்த்தார்.  சூழலைப் பற்றி அவருக்குப் புரிய வைக்க  நானே பேசினேன்.   பிழைப்புவாதிகள் எல்லா இடத்திலும் உண்டு.இதில் குறிப்பிட்ட மதம் என்று வரம்புகள் எல்லாம் கிடையாது. ஒருவருக்கு தன்னுடைய மதம், சாதியில் கௌரவமில்லை. இழி...

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையி...