இடுகைகள்

தரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உப்பு தின்றால்....

தூத்துக்குடி யில் தயாரித்து வரும் ****ன் என்ற பிராண்டில் சிறு கற்கள் எப்போதும் காண கிடைக்கின்றன. கமிஷன் கொடுத்து கடையில் பொருட்களை சரியாக தரமாக கொடுக்க முடியவில்லை. இனி உப்புக்காக வேறொரு பிராண்டை தேடிப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் லாபத்தை பற்றி மட்டுமேயும் மக்கள் ஏமாற்றப்பட்டு காசுக்கான மதிப்பு குறையாத பொருட்களை தேட வேண்டியுள்ளது. உப்பை தூய்மை செய்யக்கூட கருவிகள் இல்லையா? எப்போதும் போல உள்ள இந்திய அலட்சியமா என்று தெரியவில்லை.

வங்கி ஓடிபியில் பணியாளருக்கு ரேட்டிங்கை வழங்குவது எப்படி? பத்து நிமிட வழிகாட்டி கட்டுரை

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் - பலவித அனுபவங்கள்  நான் கணக்கு வைத்துள்ள வங்கி விவசாயிகளுக்கானது. இப்போது மெல்ல படித்த வர்க்கத்தினருக்காக கட்டாயமாக மாறி வருகிறது. படிக்காத வாடிக்கையாளர்களைக் கூட மிரட்டி கட்டாயப்படுத்தி கடன் அட்டையை திணித்து அதன் வழியாக பணத்தை எடுக்கச் சொல்கிறார்கள். அதற்கான சேவைக் கட்டணம் அவர்களுக்கு முக்கியமானதாக படக்கூடும். ஊழியர்களுக்கு ஆண்டு இலக்கு கூட நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம். இந்தவகையில் அதுவரை வழங்கப்படாத கடன் அட்டை நிறைய பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பெண்கள் அனைவருமே கல்வியறிவற்றவர்கள். அதுவரை படிவத்தில் காசு வேண்டுமென்றால் அதை வங்கியிலுள்ள சீருடை தரித்த பெண்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு வந்து காசாளரிடம் கொடுத்துத்தான் பெறுவார்கள். ஆனால், படிவம் எழுதுகிறவர்களைக் கூட, இன்று கட்டாயப்படுத்தி கொடுத்த கடன் அட்டை இருக்கிறதல்லவா, அதைப் பயன்படுத்துங்கள் என வங்கி அதிகாரிகள் கூச்சலிடுகிறார்கள்.  மாற்றங்கள் இந்திய சமூகத்தில் மெதுவாகத்தான் வரும் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள் போல. இதுபற்றி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஒருமுறை கூறியிருக்கிறார். நூலகம் ஒன்ற...

ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்!

  ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்! சீனா ஒரு காலத்தில் வெளிநாட்டு பொருட்களை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து தனக்கான பொருட்களை உருவாக்கி்க்கொண்டது. அங்கு கண்டுபிடிப்புகளே கிடையாது. காப்பி பேஸ்ட் மட்டுமே என்ற நிறைய கருத்துகள் கூறப்பட்டன. தொடக்க காலத்தில் இதில் உண்மை இருந்தாலும் ஒரு நாடு அப்படியே இருப்பதில்லை. இன்று சீனாவில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் பாதிப்பு இருக்கலாம். ஆனால், அவை வேறுபட்ட பல்வேறு வசதிகளை வழங்கி மக்களின் தினசரி வாழ்க்கையில் பங்களித்து வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தை இப்போது பார்க்கலாம். அதன் பெயர் சினா வெய்போ. 50 மில்லியன் பயனர்கள் இந்த சமூக வலைதளத்தில் உள்ளனர்.  இதை உருவாக்கியவர் தைவான் நாட்டைச் சேர்ந்த கை பு லீ. 1961ஆம் ஆண்டு பிறந்த லீ, அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு கணினி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். ஆப்பிள், சிலிகான் கிராபிக்ஸ், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. சீனாவின் பெய்ஜிங்கில் கூகுள் நிறுவனத்திற்காக வேலை செய்தார். அப்போது சீனாவில் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியுதவி செய்ய...

வங்கிக் கணக்கும், உப்பு வழக்கும்!

படம்
  1 ஒரு வங்கிக்கணக்கை மூடுவது எப்படி? இதை நீங்கள் எளிதாக மின்னஞ்சல் அனுப்பி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு எளிதாகவெல்லாம் காரியம் நடக்காது. கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள வங்கியில் எனக்கு கணக்குள்ளது. அந்த கணக்கை மூட விரும்பினேன். இணையத்தில் அதற்கான வழியைத் தேடினால், நேரடியான வழிகள் ஏதுமில்லை. ஏஐ உதவியாளரிடம் கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைக்கிறது. அதாவது, வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இதோடு கணக்கை மூடிவிடுங்கள் என கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கணக்கு வைத்துள்ள கிளைக்கு கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கணக்கு மூட முடியும்.  கும்பகோணம் வங்கியின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே குறையக்கூடாது. குறைந்தால் அபராதம் உண்டு. மற்றபடி காசு நிறைய கணக்கில் இருக்கும்வரை பெரிய சிக்கல் ஏதுமில்லை. அட்டை, வங்கியின் ஆப் என அனைத்துமே சிறப்பாகவே இயங்குகிறது. கணக்கு தொடங்கியபோது போனில் வீடியோ கால் செய்து அதன்வழியாக தொடங்க நிர்பந்தம் செய்தனர். என்னுடைய ஊரில் உள்ள இணைய வேகத்திற்கு கூகுள் தேடல் பக்கமே பத்து நிமிடம் ஆகும் திறப்ப...

பின்லாந்து கல்விமுறையில் என்ன சிறப்பு உள்ளது?

படம்
  டீச் லைக் ஃபின்லாந்து டிமோத்தி டி வாக்கர் கல்வி கட்டுரை நூல் அமெரிக்க ஆசிரியரான வாக்கர், பின்லாந்துக்கு பணிமாறி செல்கிறார். அங்கு ஹெல்சின்கி என்ற நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். அவரைப் பொறுத்தவரை வேலை என்பதில் ஓய்வே கிடையாது. மனிதனா, எந்திரமா என்று கேட்கும்படி உழைக்கவேண்டும் என பாடுபடுகிறார். இறுதியாகத்தான் தெரிகிறது. அப்படி பாடுபட்டு உழைக்கவேண்டியதில்லை. மாணவர்கள் உயருவதற்கு, கவனிப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தால் போதும் என புரிந்துகொள்கிறார். அதற்காக ஏராளமான நூல்களைப் படித்து பல்வேறு சோதனை முறைகளை செய்து பார்க்கிறார். அதைப்பற்றிய அனுபவங்களை பகிரும் நூல்தான் இது.  பின்லாந்தில் உள்ள கல்விமுறை, கல்வி ஆராய்ச்சி பற்றி வாக்கர் முதலில் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அமெரிக்க முறையில் கல்வியை போதிக்கிறார். தன்னை சற்று நெகிழ்த்திக்கொள்வதில்லை இறுக்கமாகவே இருக்கிறார். அவர் மனம் எப்படி மெல்ல மாறுகிறது என்பதே நூல் விளக்குகிறது. நூலில் அதிகமுறை வரும் வார்த்தை, அமெரிக்காவில், அமெரிக்க கல்விமுறையில் என்பதுதான். பின்லாந்து எப்படிப்பட்ட நாடாக இருந்தாலும் சரி, அந்த நாட்டின...

மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும், தரமும் வேறுபடுவது எங்கு? - ஜவகர்லால் நேரு உரை

படம்
              எய்ம்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான ராஜ்குமார் அம்ரித் கௌருக்கு அஞ்சலி செலுத்துவதில் மாணவர்கள், ஆசிரியர்களுடன் நானும் இணைந்துகொள்கிறேன். என்னுடைய நினைவில் மருத்துவமனையையு்ம, தலைவரையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அந்தளவு அவரின் பணி, மருத்துவமனையோடு ஒன்றிவிட்ட ஒன்று. மருத்துவமனையின் உருவாக்கம் தொடர்பாக கௌர், பல்வேறு விஷயங்களை என்னோடு விவாதித்திருக்கிறார். செயல்பாடுகளில் பிரச்னைகள் வரும்போது என்னைத் தேடி வந்திருக்கிறார். இன்று அவர் நம்முடன் இல்லை என்பது மனதளவில் வேதனை அளிப்பதாக உள்ளது. மருத்துவமனையில் நடைபெற்ற இரண்டாவது பட்டமளிப்பு விழாவுக்கு என்னை அழைத்தபோது, சரி என இசைவு தெரிவித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனை அளவிலும் தரத்திலும் வாக்குறுதி அளித்த வகையில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. செயல்பாடுகளும் பாராட்டு்ம தரத்தில் உள்ளது. முதுகலை படிப்பு படித்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதியான சிறந்த இடமாக இம்மருத்துவமனை உள்ளது. சிகிச்சையின் உயர்ந்த தரத்தை தொடர்ந்து பராமரிக்க பல்வேறு பாடங்களைச் சொல்லித் தந்து வருகிறார்கள். எண்ண...

சிறிய இமேஜரி ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து கொடுக்கும் கேலக்ஸ் ஐ! - சுயாஸ் சிங்

படம்
  சுயாஸ் சிங், கேலக்ஸ் ஐ கேலக்ஸ்ஐ குழுவினர் சுயாஸ் சிங், இயக்குநர், துணை நிறுவனர் கேலக்ஸ் ஐ இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் வணிக ரீதியான தேவைகளுக்கான இமேஜிங் ரேடார்களை உள்நாட்டில் தயாரித்து வருகிறது, கேலக்ஸ் ஐ. இந்த நிறுவனம், உலகளவில் உள்ள இமேஜிங் ரேடார் சந்தையை குறிவைத்துள்ளது. 40 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் இந்த சந்தை   வளர்ந்துள்ளது. தற்போது இந்தியா, இமேஜிங் ரேடார் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் மற்றும் பிற வெளிநாடுகளிடம் பெற்று பயன்படுத்தி வருகிறது. அரசியல் சூழல்கள் மாறும்போது வெளிநாடுகள், தங்கள் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்குவது நிறுத்தப்படும். எனவே, உள்நாட்டில் அதற்கான முயற்சிகளை எடுப்பது அவசியம். அந்த வகையில் கேலக்ஸ் ஐ என்ற தனியார் நிறுவனம் இமேஜிங் ராடார் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் வணிக மதிப்பு 15 மில்லியன் டாலர்களாக உள்ளது. மல்டி சென்சார் இமேஜிங் தொழில்நுட்பத்தில் கேலக்ஸ் ஐ மூன்று காப்புரிமைகளைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சிறிய செயற்கைக்கோள்களை , போனில் உள்ளடங்கும் அளவிலான பொருட்களைக் கொண்டு தயாரித்து...

மண்ணின் தரத்தை 90 நொடியில் அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத்...

ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுகிறதா?

படம்
                  ஹால்மார்க் சட்டங்களால் பாதிப்பு உண்டா ? ஜூன் 16 முதல் தங்க நகைகள் , அதில் செய்யப்படும் கலை பொருட்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரம் அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது . இதுதொடர்பாக ஹால்மார்க் சட்டத்தையும் கடந்த ஆண்டே உருவாக்கியுள்ளது . இதுபற்றி பார்ப்போம் . ப்ரியூ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ் அங்கீகரித்த மையங்கள் மூலம் ஹால்மார்க் சா்ன்றிதழ்களை நகை தயாரிப்பாளர்கள் பெறலாம் . தங்க நகையின் தரம் இவ்வளவுதான் என்று மக்களிடம் கூறும் தரத்திற்கான சான்றிதழ்தான் ஹால்மார்க் ்என்பது . 22 கே 915 என்று முக்கோண வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதுதான் ஹால்மார்க் அங்கீகாரம் . இதில் நான்கு வகை உண்டு . தங்கம் எந்தளவு தூய்மையாக உள்ளது என்பதையு்ம் ஹால்மார்க் மூலம் அறியலாம் . 14, 18, 20,22 என பல்வேறு கேரட் தங்கங்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன . குறிப்பிட்ட நகை ஒன்றுக்கு ஹால்மார்க் சான்றிதழ் வழங்க அரசுக்கு ரூ . 35 பிளஸ் ஜிஎஸ்டி வரியோடு வழங்கவேண்டும் ஒருவரிடம் ஹால்மார்க் அங்கீகாரம் இல்லாத தங்கம் இருந்தாலும் கூட அதனை தங்...