ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுகிறதா?

 

 

 

 

 

New rules for buying and selling gold; How to identify ...

 

 

 

 

ஹால்மார்க் சட்டங்களால் பாதிப்பு உண்டா?


ஜூன் 16 முதல் தங்க நகைகள், அதில் செய்யப்படும் கலை பொருட்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரம் அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக ஹால்மார்க் சட்டத்தையும் கடந்த ஆண்டே உருவாக்கியுள்ளது. இதுபற்றி பார்ப்போம்.


ப்ரியூ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ் அங்கீகரித்த மையங்கள் மூலம் ஹால்மார்க் சா்ன்றிதழ்களை நகை தயாரிப்பாளர்கள் பெறலாம். தங்க நகையின் தரம் இவ்வளவுதான் என்று மக்களிடம் கூறும் தரத்திற்கான சான்றிதழ்தான் ஹால்மார்க் ்என்பது. 22கே915 என்று முக்கோண வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதுதான் ஹால்மார்க் அங்கீகாரம். இதில் நான்கு வகை உண்டு. தங்கம் எந்தளவு தூய்மையாக உள்ளது என்பதையு்ம் ஹால்மார்க் மூலம் அறியலாம். 14, 18, 20,22 என பல்வேறு கேரட் தங்கங்களுக்கு ஹால்மார்க் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட நகை ஒன்றுக்கு ஹால்மார்க் சான்றிதழ் வழங்க அரசுக்கு ரூ. 35 பிளஸ் ஜிஎஸ்டி வரியோடு வழங்கவேண்டும்


ஒருவரிடம் ஹால்மார்க் அங்கீகாரம் இல்லாத தங்கம் இருந்தாலும் கூட அதனை தங்க நகைக்கடையில் விற்கலாம். அவர்கள் அதனை உருக்கி குறிப்பிட்ட காரட் அளவில் ஹால்மார்க் அங்கீகாரம் கொண்ட நகையாக மாற்றிக்கொள்ள முடியும். தங்கத்திற்கு தரப்படும் விலை, கடைக்கு கடை மாறுபடும் என்பதை மனதில் கொண்டு அங்கீகாரமற்ற நகையை விற்க வேண்டும்.


இரண்டு கிராம்களுக்கு குறைவான நகைளுக்கு ஹால்மார்க் தேவையில்லை என்று அரசு கூறியுள்ளது. நாட்டிலுள்ள 256 மாவட்டங்களில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஆண்டுக்கு நாற்பது லட்சம் ரூபாய் வருமானம் சம்பாதிக்கும் நகைக்கடைக்கார ர்கள் ஹால்மார்க்கை பெற வேண்டும் என்பது அவசியம் கிடையாது. ஆனால் அவர்கள் இதற்கென விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.


ஹால்மார்க்கை எதற்கு போய் காசு கொடுத்து வாங்கவேண்டுமென வீட்டு முறை தயாரிப்பாக தொழிற்சாலைகளில் தானே அச்சடித்துக்கொள்பவர்களும் உண்டு. இதனை டப்பா ஹால்மார்க் என்று கூறுகின்றனர். இப்படி டுபாக்கூர் வேலைகளை செய்பவர்களிடமிருந்து நகைகள் வாங்கினாலும் கூட அதனை மத்திய அரசின் மையங்களில் ரூ.200 கொடுத்து அசலா, நகலா என சோதித்து நிம்மதி அடையலாம். போலியாக இருந்தால் புகார் கொடுத்து கடைக்கார ர்களுக்கு பெனால்டி விதிக்கவும் வகை செய்யலாம்.


கொரோனா காலத்தில் பலரும் மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செலவுகளை செய்கின்றனர். ஹால்மார்க் நகைகள் என்பது ்நாம் வாங்கும் நகையிலுள்ள தங்கத்தின் தரம்தான். அப்படியல்லாத நகைகளையும் கடன் நிறுவனங்கள் சோதித்துத்தான் வாங்குகின்றன. எனவே, அடகுவைத்து கடன் வாங்குவதில் பெரிய சிக்கல் ஏதும் எழாது.


லிவ் மின்ட்


ரேணு யாதவ்




கருத்துகள்