நீரின்றி தவிக்கப்போகும் கோடிக்கணக்கான மக்கள்!- இமாலயத்தில் உருகும் பனிப்பாறைகள்

 





சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. ஆறுகள் உருவாகி வரும் இமயமலையில் இதற்கான பாதிப்புகள் தொடங்குவதால் விரைவில் டெல்லி, பெங்களூரு, இந்தூர், ரூர்க்கி, நேபாளம், அகமதாபாத் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. 

ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா ஆகியவை சிந்து நதியினை நம்பியுள்ளன. டெல்லி, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானின் பெரும்பகுதி கங்கை நதியை நம்பியே நிலப்பரப்புகள் உள்ளன.  அசாம், சிக்கிம், நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் பிரம்ம புத்திரா ஆற்றை நம்பியே உள்ளன. 

உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி, டாகா, லாகூர், கராச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களையே அதிகம் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உலகளவில் பார்த்தால் எட்டில் ஒருவர் என்று கூறலாம். 

இமாலயத்திலுள்ள காரகோரம் பகுதியில் உருவான பனிப்பாறைகள் மெல்ல வெப்பத்தால் உருகத் தொடங்கியுள்ளன. இதனால் வெயில் காலத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை பனிப்பாறைகள் உருகுகின்றன. பிறகு பனிக்காலம் தொடங்கும்போது உருகி வந்த நீர் அப்படியே உருகிவிடுகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஆற்றுநீரின் அளவு மாறி வருகிறது. இமயமலைலியிருந்து வரும் நீர், 2.75 சதுர கி.மீ. அளவுக்கு நிலப்பரப்புகளை வளப்படுத்துகிறது. 

பருவநிலைகளில் மாற்றம் ஏற்பட்டு பனிப்பாறைகள் உருகுவதால், மலையில் உள்ளவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மலையில் கீழே உள்ளவர்களுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான ஆய்வுத்தகவல்கள் தேவை. அப்போதுதான் இதனை சரியாக மதிப்பிட்டு தேவையான செயல்பாடுகளை முன்னெடுக்க முடியும். 

நிகில் கனேகர்

மூலம்

https://www.indiaspend.com/climate-change/south-asia-water-insecurity-warming-himalayas-basins-760317







கருத்துகள்