பாகுபாடுகளை வெளிக்காட்டும் இமோஜி ஐகான்கள்! - புதிய இமோஜிகள் வெளியீடு

 செய்திஜாம் 

ஆஹா!




தேர்வில் வெற்றி!

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு தேர்வில், 99.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிகளில் ஆசிரியர்களால் நடத்தப்படும் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ”15,75,806 மாணவர்கள் பத்தாவதில் இணைந்தனர். இவர்களில் 15, 75,752 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட 4.65 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது” போர்டு தலைவர் தின்கர் பாடீல் தெரிவித்தார். 

https://www.thenewsminute.com/article/maharashtra-board-class-10-results-declared-9995-students-pass-152459

இனவெறி கூடாது




இங்கிலாந்து கால்பந்து வீரர் மார்கஸ் ராஸ்போர்டுக்கு ஆதரவாக திரண்டு குரல் கொடுக்கும் ஆதரவாளர்கள்

இடம் பிரிட்டன், மான்செஸ்டர்


அப்படியா!?

என்ன உயரம்!




சீனாவைச் சேர்ந்த பேஸ்கட்பால் வீராங்கனை ஸாங் ஸியூ, தனது அபார உயரத்தாலும், திறனாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பதினைந்து வயதுக்குட்பட்ட தேசிய பேஸ்கட்பால் போட்டியில் ஸாங் பங்கேற்றார். ஏழு அடி நாலு அங்குல உயரத்தில் உள்ள ஸாங், போட்டியில் 45 புள்ளிகளை எடுத்து தனது அணியை வெற்றி பெறவைத்தார். இவரது பெற்றோர் இருவருமே பேஸ்கட்பால் விளையாட்டு வீரர்கள். வெய்போ சமூக வலைத்தளத்தில் ஸாங் பற்றிய வீடியோ  வைரலாகி வருகிறது. 

https://www.indiatimes.com/trending/human-interest/chinese-girl-viral-on-internet-basketball-skills-545139.html

அபாரம்!

அனைவருக்கும் தடுப்பூசி!


பனிரெண்டு முதல் பதினெட்டு வயது வரையிலான  பிரிவினருக்கு விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்றுக்கு மத்திய அரசின் கூடுதல் வழக்குரைஞர் சேட்டன் சர்மா, மேற்கூறியவாறு பதிலளித்தார். பாரத் பயோடெக் நிறுவனம், 2 -18 வயது பிரிவினருக்கான தடுப்பூசியை சோதித்து பார்க்க இந்திய  மருத்துவக்கட்டுப்பாட்டு தலைவர் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஸைடஸ் கடிலா நிறுவனம் டிஎன்ஏ தடுப்பூசியை 12-18 வயதினருக்காக தயாரித்து இருப்பதைக் குறிப்பிட்ட சேட்டன் சர்மா, இந்த நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். 

https://indianexpress.com/article/india/vaccines-may-soon-be-available-for-12-18-age-group-centre-to-delhi-hc-7408677/

இது புதுசு!

சைக்கிள் பழகுவோம்!




கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் சைக்கிள் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிக்க மாணவர்களின் மூலம் கார்ப்பரேஷன் பிரசாரம் செய்து வருகிறது. இதன்படி ஏழாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களைப் பங்கேற்க வைத்து வெற்றியாளரை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த பைக்ஸ்(BYCS) என்ற அமைப்பு, சமூக இணைப்பை ஏற்படுத்த உலகம் முழுக்க இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மதுர் என்ற மாணவி, ஜூனியர் மேயராக சைக்கிள் திட்டத்தில் தேர்வாகியுள்ளார். உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூனியர் மேயர்களில் இவர் நான்காவது இடத்தை வகிக்கிறார். 

https://www.newindianexpress.com/good-news/2021/jul/15/meet-madhur-junior-bicycle-mayorof-thiruvananthapuram-2330135.html

பாராட்டுகள்!

Pregnant man and multiracial handshake emojis unveiled before launch



A pregnant man, a multiracial handshake and a face that cannot bear to watch are some of the emojis that will hit devices over the next year, according to a draft list published by the Unicode Consortium, which approves icons for use.The new emojis, illustrated by Emojipedia to celebrate World Emoji Day on Saturday, all but complete the consortium’s drive to offer masculine, feminine and gender-neutral versions of every available emoji, as well as a selection of skintones.Trans and non-binary pregnancies will now be represented in the emoji set, thanks to two new gender options for the “pregnant woman” emoji, while “person with crown” joins “prince” and “princess” for gender-neutral royalty.

https://www.theguardian.com/technology/2021/jul/16/pregnant-man-and-multiracial-handshake-emojis-approved-for-launch


கருத்துகள்