சந்தையில் அசத்தும் இசைக்கிள்கள்!
இ சைக்கிள் சக்தி
சாதாரண சைக்கிள் ஓட்டுவதற்கான இடங்கள் கூட கார் பார்க்கிங்குகளாக மாற்றப்பட்டுவிட்டன. இருந்தாலும் கூட எரிபொருள் விலையுயர்வு ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் சைக்கிள் என்பது முக்கியமானதுதான். பராமரிப்பு செலவு குறைவு என்பதோடு இதனை பயன்படுத்துவது உற்சாகமான அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்.
இ சைக்கிள்கள் எடை குறைவாக, கவர்ச்சிகரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. பேட்டரியுடன் ஆற்றலுடன் உள்ளதோடு காரை விட குறைந்த மாசுபாட்டைய
ஏற்படுத்துகிறது. இப்போது இதில் சிறப்பான இ சைக்கிள்களைப் பார்ப்போம்.
ஆல்ரவுண்டர் பெஸ்ட்
டர்போ வாடோ எஸ்எல்
சைக்கிளின் பிரேம்களில் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள ஸ்டைலான இபைக் இது. பார்க்க சாதாரண சைக்கிள் போல இருந்தாலும் மணிக்கு 28 கி.மீ வேகத்தில் காட்டுப்பகுதிகளுக்குள் செல்லலாம். எடை 33 பவுண்டுகள்தான் என்பதால் சைக்கிளின் ஹேண்டிலை பிடிக்கும்போது கை வலிக்காது. வேறுபட்ட நிலப்பரப்புகளிலும் அதிக கஷ்டமின்றி பயணிக்க முடியும். விலை 4,750 டாலர்கள்
சிறந்த பயணம்
பேட்ச் இபைக்
2,100 டாலர்களுக்கு வாங்கும் இ சைக்கிள் என்பதால் தரம் பற்றி சந்தேகப்படவேண்டாம். டிஸ்க் பிரேக்குகள், சிமோனா பாகங்கள் என பார்க்கவும் பயன்படுத்தவும் நன்றாகவே இருக்கிறது. விளக்குகளை நீங்களே தனியாக காசு கொடுத்துத்தான் வாங்கவேண்டும். மற்றபடி மதிப்பு காசுக்கானதுதான். மோசமில்லை.
சிறந்த மதிப்பு
புரபெல்லா 7 ஸ்பீட்
பட்ஜெட்டில் இ சைக்கிள் வாங்கவேண்டும். ஆனால் அது ஓரளவு மனசுக்கும் திருப்தியாக இருக்கவேண்டும் என்றால் அதற்கு புரபெல்லாவைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். விலை ரூ. 1299 என்றாலும் நம்பகமான மோட்டார், 39 பவுண்டு எடை, டிஸ்க் பிரேக், சஸ்பென்ஷன் என அனைத்துமே நேர்த்தியாக இருக்கிறது.
சிறந்த பயன்பாடு
ராட் ரன்னர்
சியாட்டிலைச் சேர்ந்த நிறுவனம் 1,299 டாலரில் தயாரித்துள்ள இபைக் இது. போஸ்ச், சிமோனா பாகங்கள் இதிலும் உண்டு. தடிமனான டயர்கள், 120 பவுண்டு எடை, அலுமினிய பெடல் என வசதிக்கு குறைவில்லாத வண்டி.
அட்ரியன்னா சோ
வயர்டு
கருத்துகள்
கருத்துரையிடுக