20 ஆயிரம் ரூபாயில் இபைக் தயாரித்துள்ள பாஸ்கரன்!
நியூஸ் ஜங்க்ஷன்
20.7.2021
அபாரம்!
இபைக்!
தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்தவர், பாஸ்கரன். இவர் இயந்திர பொறியியல் படித்துள்ளவர், 20 ஆயிரத்தில் இ பைக்கை உருவாக்கியுள்ளார். ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. தூரம் செல்லும் வாகனம் இது. ஓய்வுநேரத்தில் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கி, இ பைக்கிற்கு ஏற்பட 18 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை மாற்றினார். ”30 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த இபைக்கில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் பெடல் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்” என்றார் பாஸ்கரன்.
https://www.newindianexpress.com/good-news/2021/jul/19/as-fuel-prices-rise-man-spends-rs-20k-makes-e-bike-that-goes-up-to-50-km-2332149.html
போராட்டம்!
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல மாக்ரன் அறிவித்த நோய்த்தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள்!
இடம் பிரான்ஸ், பாரீஸ்
ஆஹா!
கண்டுபிடிப்பு!
கேரளத்தைச் சேர்ந்த இந்திரியம் பயாலஜிஸ்ட் நிறுவனம், பாம்பின் விஷத்தை கண்டுபிடிக்கும் சென்சார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. 52 நச்சுப்பாம்புக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் பாம்பு தீண்டுவதால், ஆண்டுதோறும் தோராயமாக 50 ஆயிரம் மரணங்களுக்கு மேல் ஏற்பட்டு வருகிறது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டுபிடித்துள்ள பயோசென்சாரில் பாம்பு தீண்டியவரின் ஒரு துளி ரத்தத்தை சோதித்தாலே போதும். அதில் விஷம் உள்ளதாக இல்லையா என கண்டுபிடித்துவிடலாம். மருத்துவர் அனஸ்வரா கிருஷ்ணன், திலீப் குமார் ஆகியோர் இந்த பயோசென்சாரை இணைந்து உருவாக்கியுள்ளனர்.
https://indianexpress.com/article/india/kerala/kerala-startup-develops-biosensor-device-that-could-revolutionise-snakebite-diagnosis-7412331/
அடச்சே!
பெருமழை!
இந்தியாவில் டில்லி, மும்பை ஆகிய நகரங்களில் பெய்த பெருமழையால், நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டு 35 மக்கள் பலியாகியுள்ளனர். மும்பையின் புறநகர்ப்பகுதியில் உள்ள வீடுகள் மழை பெய்ததால் பாதிப்புக்குள்ளாகி இடிந்து விழுந்துள்ளன. ஐரோப்பாவில் வெள்ளம், சீனாவில் அணை உடைப்பு, வட அமெரிக்காவில் வெப்பம் அதிகரிப்பு என பருவச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவது முக்கியமானது. வானிலை ஆராய்ச்சி மையம், கனமழை பெய்வது பற்றி எச்சரிக்கை செய்திருந்தது.
https://www.reuters.com/world/india/heavy-rains-cripple-indian-cities-least-35-killed-2021-07-19/
பாராட்டுகள்!
தங்கமே வேண்டாம்!
கேரளத்தைச் சேர்ந்த சதீஷ் சத்யனுக்கு ஸ்ருதிராஜ் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் முக்கியமான விஷயம், திருமண சடங்குகள் முடிந்தவுடன் பெண்ணுக்கு அவரது பெற்றோர் வழங்கிய நகைளை திரும்ப கொடுத்துவிட்டார் சத்தியன். வரதட்சணை கொடுமையால் பெண்களுக்கு சித்திரவதை நடப்பதால், தனது திருமணத்தில் வரதட்சணை வாங்குவது இல்லையென சத்தியன் முடிவெடுத்து செயல்படுத்தியிருக்கிறார். சத்தியனின் செயலுக்கு பலரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
https://english.mathrubhumi.com/news/good-news/-no-gold-please-alappuzha-youth-declares-anti-dowry-statement-on-wedding-day-kerala-1.5833796
Russia deploys planes to seed clouds to fight wildfires in Siberia
Planes were deployed to seed clouds to trigger rains in an effort to fight the wildfires raging in Russia's Siberian region, Russian authorities said on Monday. The officials in Yakutia, the worst-hit region, had told people to stay indoors and to keep windows shut due to the smoke. Fires have flared across Russia amid a heatwave.
https://www.inshorts.com/en/news/russia-deploys-planes-to-seed-clouds-to-fight-wildfires-in-siberia-1626715748441
கருத்துகள்
கருத்துரையிடுக