மக்களைக் கண்காணிக்கும் ட்ரோன்கள்!- நவீனமயமாகும் தமிழக காவல்துறை
நவீனமயமாகும் தமிழக காவல்துறை!
இனி நகரங்களில் இரவில் ட்ரோன்கள் சுற்றி வந்தால் ஏதோ ப்ரீ வெட்டிங் ஷூட்டிங் தான் நடத்துகிறார்கள் போல என்று நினைத்துவிடாதீர்கள். தமிழக காவல்துறை ட்ரோன்கள் உட்பட 14 நவீன கருவிகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். பாரட் அனாப்டி, டிஜேஐ பாண்டம் என்ற ட்ரோன் வகைகளில் பதினான்கு ட்ரோன்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. இதனை முக்கியமான நகரங்களிலுள்ள துணை கமிஷனர்களுக்கு வழங்கி பொது இடங்களில் பறக்கவிட்டு கண்காணிக்க உள்ளனர். பொதுமுடக்க காலத்தில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட வழக்குகள் ட்ரோன்களின் கண்காணிப்பில் பதிவாகியுள்ளன.
ட்ரோன்களில் அதிகாரிகளுக்கு கட்டளைகளை இட ஸ்பீக்கர் பொருத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுபற்றி ஜிவால், நாங்கள் ஸ்பீக்கரை ட்ரோனில் பொருத்தி உத்தரவுகளை வழங்க நினைத்தோம். ஆனால் அது ட்ரோனில் கூடுதல் எடையாக இருந்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது என்றார்.
பாரட் அனாபி தெர்மல் ட்ரோன்
எடை 315 கிராம்
4 கி.மீ.
26 நிமிடங்கள் பறக்கும்
50 மீட்டர் முதல் 4500 மீட்டர் வரையில் பறக்கும்
இரவிலும் கண்காணிக்க முடியும் கேமராக்கள் இதில் உள்ளன. எனவே விளக்குகள் இல்லாத இடத்திலும் கூட கண்காணிக்க முடியும். மழை பெய்யும்போது கூட ஒரு மீட்டர் அளவில் பறக்கும்.
டிஜேஐ பாண்டம் ப்ரோ
எடை 1.4 கி.கி
ஏழு கிலோ தூரத்தை பார்க்கலாம்.
30 நிமிடங்கள் பறக்கும்
6 ஆயிரம் மீட்டர்கள்
கடற்கரையில் நீருக்குள் செல்பவர்களை கட்டுப்படுத்தவும், வணிகப்பகுதிகளிலும் இதனைப் பயன்படுத்தலாம். பெருந்தொற்று காலத்தில் ட்ரோன்களில் ஸ்பீக்கர்களைப் பொருத்தியும், கிருமிநாசினிகளை தெளிக்குமாறும் செய்தனர்.
ட்ரோன்களை நானோ ட்ரோன் , மைக்ரோ ட்ரோன் என இருவகையாக பிரிக்கின்றனர். நானோ ட்ரோனில் 250 கிராம் எடைதான் இருக்கும். கூடுதலாக எடையை சேர்ப்பது கடினம். மைக்ரோ ட்ரோனில் இரண்டு கிலோ வரை எடையை அதிகரிக்கலாம். நானோ 50 அடி தூரம் பறக்கும். மைக்ரோ ட்ரோன் 200 அடி தூரம் பறக்கும்.
சிறிய, நடுத்தர, பெரிய என மூன்று வகைகளில் ட்ரோன்கள் விற்கப்படுகின்றன. இரண்டு முதல் ஐந்து கிலோ, ஐந்து கிலோ முதல் 150 கிலோ, 150 கிலோவுக்கும் அதிகம் என உள்ளன.
இவற்றை இயக்க வான்வழிப் போக்குவரத்துதுறை தலைவரின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும்.
அப்படி அனுமதி பெற்றாலும் இரவில் இயக்க கூடாது. ட்ரோன்களை அனுமதிக்காத இடத்தில் பறக்கவிடக்கூடாது. காவல்துறையின் அனுமதி பெற்றே திருமணத்தில் ட்ரோன்களை பயன்படுத்தவேண்டும். 50 அடி முதல் 200 அடி வரை ட்ரோன்களை பறக்கவிட காவல்துறையின் அனுமதி தேவை. ராணுவத்தளங்கள் இருக்கும் பகுதியில் 3 கி.மீ வரை ட்ரோன்களை பறக்கவிடக்கூடாது.
மெரினா மற்றும் எலியட் கடற்கரைகளில் மக்களை கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் விமானதளங்களுக்கு அருகில் ட்ரோன்களை பறக்கவிட அனுமதி கிடையாது.
டைம்ஸ் ஆப் இந்தியா
சிந்து கண்ணன், செல்வராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக