அமெரிக்கர்களின் தனிமையைப் பேசும் நூல்! - நூல் அறிமுகம் ஜூலை மாதம் 2021
ரேஷர் பிளேட் டியர்ஸ்
எஸ்.ஏ. காஸ்பை
தனது மகன்களையும், தம்பதிகளையும் கொன்ற கொலைகாரர்களை அவர்களின் தந்தை யர் இருவரும் சேர்ந்து எப்படி பழிவாங்குகிறார்கள் என்பதுதான் கதை. நிகழ்கால கதையின் நடுவே பழிவாங்குபவர்களின் கடந்தகால வாழ்க்கையு்ம் வந்துபோகிறது. அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நடைபெறும் வன்முறையான சம்பவங்கள் கொண்ட கதை.
கோஸ்ட் ஃபாரஸ்ட்
பிக் சுயன் ஃபங்
அப்பா இறந்த பிறகு அவரைப் பற்றிய இறந்த கால விஷயங்களை மகள் எப்படி தெரிந்துகொள்கிறாள் என்பதைப் பற்றி இந்த நூல் விவரித்துச் செல்கிறது. இந்த கதையில் மகளின் மனதிலுள்ள கேள்விகள், குடும்பம், அவளுக்கு கிடைத்த அன்பு பற்றிய ஏராளமான விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது.
சீக் யூ
கிரிஸ்டன் ராட்கே
வரலாறு, தனிமை, ஒருவருக்கொருவர் எப்படி தகவல் தொடர்பு கொள்வது என பல்வேறு விஷயங்களை விளக்கி கிராபிக் கட்டுரை நூலாக ஆசிரியர் எழுதியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக