பாலாஜி வேபர்ஸ் - குஜராத் நிறுவனத்தின் பிடிவாத சாதனை!

 







குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பாலாஜி வேபர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டுவருகிறது. 1982 இல் தொடங்கிய நிறுவனம் 2014ஆம் ஆண்டு ஆயிரம் கோடி என்ற அளவில் லாபத்தை அடைந்துள்ளது. நூடுல்ஸ் மற்றும் சிப்ஸ்களை பல்வேறு பிராண்டுகளில் தயாரித்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விற்று வருகிறது. ராஜஸ்தான் , மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதலிடத்திலும் பிற மாநிலங்களில் டாப் 3 நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது. 

இந்த நிறுவனத்தை 4 ஆயிரம் கோடிக்கு பன்னாட்டு நிறுவனம் வாங்குவதற்கு முயன்றாலும் அதை விற்பதற்கு  இதன் முதலாளி விரும்பவில்லை. இப்போது 2 ஆயிரம் கோடியை தாண்டிய வணிகத்தைப் பெற்று வளர்ந்துவருகிறது. 

பாலாஜி வேபர்ஸ் நிறுவனம், உருளைக்கிழங்கு சிப்ஸ்களை பல்வேறு பிராண்டுகளில் விற்றுவருகிறது. நிறுவனத்தின் வணிகத்தை இப்போது அடுத்த தலைமுறையினர் பார்த்துக்கொள்கிறார்கள். குடும்ப வணிகமாக இருப்பதால் எப்படியோ தாக்குப்படித்து பெப்சிகோ, ஐடிசி, ஹால்திராம் ஆகிய நிறுவனங்களை சமாளித்து வருகிறது. 

சந்துபாய் தனது சகோதர ர்களோடு தொடங்கிய நிறுவனம் இது. இப்போது அவரின் மகன்கள் தொழில் இறங்கி துணையாக நிற்கின்றனர். பெருநிறுவனங்கள் என்னுடைய நிறுவனத்தை வாங்க நினைத்தன. அவர்கள் கூறிய விலையும் கூட சரியானதுதான். ஆனால் நிறுவனம்தான் எனக்கு மகளும், மகனுமாக உள்ளது. அதனை நான் விற்க விரும்பவில்லை. மகளை வளர்த்தால் அவளை சரியான நேரத்தில் மணமுடித்து குடும்பத்திலிருந்து வெளியே அனுப்பவேண்டும் என்பார்கள். ஆனால் இந்த தொழிலை  எனது குடும்பமாக நினைக்கிறேன். நான் அவரகளை விட்டு பிரிய விரும்பவில்லை என்றார் சந்துபாய்.

1974ஆம் ஆண்டு ஜாம் நகரிலிருந்து ராஜ்கோட்டிற்கு பிழைக்க வந்தவர்கள்தான் விரானி சகோதரர்கள். இவர்கள் தியேட்டரிலுள்ள கேண்டீனில் வேலை செய்து தங்களுக்கான பாதையை மெல்ல அமைத்துக்கொண்டனர். சிப்ஸ் தயாரிப்பை ஒற்றை அறையில் தொடங்கி மெல்ல விரிவாக்கினர். முதலில் கடைகளுக்கு கொண்டுபோய் சிப்ஸ்களை போட்டபோது , அவரை சேதமடைந்துவிட்டன என புகார் தெரிவித்தனர். தற்போது, ராஜ்கோட்டில் தயாரித்தாலும் சிப்ஸ்களின் சுவை மாறாமல் இருந்ததால சில ஆண்டுகளியே விரானி சகோதர ர்கள் வெற்றி பெற்றனர். 

நாங்கள் பிற கார்ப்பரேட் நிறுவனங்களைப்போல இலக்குகளை முன்வைத்து வேலை பார்ப்பதில்லை. நெருக்கடிகள் இன்றி வேலைகளை செய்கிறோம். இதனால் எங்கள் வெற்றி உறுதியானது என்றார் விரானி. 

போர்ப்ஸ் இந்தியா

ராஜீவ் சிங்

 

https://www.balajiwafers.com/





கருத்துகள்