மைக்ரோடோஸ் அளவில் எல்எஸ்டி பயன்படுத்தலாமா?

 








ஹெராயின், கஞ்சா, கோகைன் ஆகியவற்றை மைக்ரோடோஸ் அளவில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால் மனநிலை மகிழ்ச்சியாகும், உற்சாகம், ஊக்கம் கிடைக்கும் என பலரும் பேசிவருகிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் போதைப்பொருட்களை சட்டரீதியாக பயன்படுத்தவும் தடை நீங்கி வருகிறது. உண்மையில் குறிப்பிட்டளவு போதைப்பொருட்களை பயன்படுத்தினால்  நன்மை கிடைக்குமா என்று  பார்ப்போம். 

1960களில் சிலோசைபின் என்ற போதைப்பொருள், எல்எஸ்டி ஆகியவை ஹிப்பிகளிடையே பிரபலமாக இருந்தன. உளவியலாளர் டிமோத்தி டியரி என்ற உளவியல் ஆய்வாளர், ஹார்வர்டில் பணிபுரிந்து வந்தார். இவரது தனது மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக சிலோசைபின் மருந்தைக்  கொடுத்து சோதித்து வந்தார். 

எல்எஸ்டியை மைக்ரோடோஸாக பயன்படுத்தினால் அதன் 6 முதல் 25 மைக்ரோகிராமாக இருக்கவேண்டும். இதனை முழுமையான அளவில் பயன்படுத்தினால் 100 முதல் 150 மைக்ரோகிராம் அளவில் பயன்படுத்தலாம். 

ரெட்டிட் சேனலில் மைக்ரோடோஸ் பயன்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,61,000.

அமெரிக்க அரசின் எப்டிஏ அங்கீகாரம் இல்லாமல் 9 கிராம் எல்எஸ்டி வைத்திருந்தால்  அவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் கட்டவேண்டும். இல்லையென்றால் ஓராண்டு சிறையில் இருக்கவேண்டும். 

2027இல் 10.75 பில்லியன் டாலர்கள் என மனநல மருத்துவ மருந்துகளின் மார்க்கெட் உயர்ந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனவரியிலிருந்து ஏப்ரல் 2021 வரை 329 மில்லியன் டாலர்கள்  முதலீடு வந்துள்ளது.  2017இல் ஒரு மில்லியன் டாலர்கள் முதலீடு கிடைத்துள்ளது.

சிலோசைபின் ஒரு கிராம்  பத்தாயிரம் டாலர்கள் விலையில் விற்கப்படுகிறது. 

1938ஆம் ஆண்டு எல்எஸ்டியை ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த  ஆல்பர்ட் ஹாப்மென்  என்ற வேதியியலாளர் கண்டுபிடித்தார். சான்டோஸ் ஆய்வகம் மூலம் எல்எஸ்டி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை முதலில் ஆல்பர்ட் கண்டுபிடித்து சோதித்தார். 

1949ஆம் ஆண்டு சான்டோஸ்  நிறுவனம், எல்எஸ்டிக்கான காப்புரிமையை பதிவு செய்தது. உளவியலாளர்களுக்கு பெரும்பாலும் எல்எஸ்டியை இலவசமாக விநியோகித்தனர்.  இதன் பிராண்ட் பெயர் டெலிசிட். 

1950களில் அமெரிக்காவில் உள்ள உளவியலாளர்கள் எல்எஸ்டியை தானும், பிற நோயாளிகளுக்கும் சேர்த்து சோதித்தனர்.  லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், போஸ்டன் ஆகிய நகரங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் இதில் முக்கியமானவர்கள். 

எழுத்தாளர் கென் கெஸ்ஸி, திரைப்பட நடிகர் கேரி கிராண்ட் ஆகியோர் எல்எஸ்டியை மைக்ரோடோஸ் அளவில் பயன்படுத்தியதாக சொல்லி பிரபலப்படுத்தினர். 

1966இல் எல்எஸ்டி ஆராய்ச்சிக்கான நிதியுதவி குறைந்துவிட்டது. 1969வாக்கில் இரண்டு மில்லியன் அமெரிக்கர்கள் எல்எஸ்டியை பயன்படுத்திக்கொண்டிருந்தனர். 

க்வார்ட்ஸ் 




கருத்துகள்