சிறையில் கொல்லப்பட்ட ஸ்டேன்சாமி!









ஸ்டேன்சாமி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருக்கிறது என்று குற்றம்சாட்டப்பட்டு மத்திய அரசின் அமைப்புகளால் கைது செய்யப்பட்டார். மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் தனது 84 வயதில் காலமாகியுள்ளார். பல்வேறு நோய்களால் வதைபட்டு தவித்தவருக்கு தேவையான உதவிகளை அரசு அளிக்காமல் அலைகழித்த விவகாரங்கள் இப்போது வெளியாகத் தொடங்கியுள்ளன. 

பாதிரியாரான ஸ்டேன் சாமி, பழங்குடி மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தவர். நோய்களால் அவதிப்பட்டு வந்தவரை விசாரணை என அலைகழித்து சிறையில் தள்ளி தேவையான வசதிகளைக் கூட செய்து தராமல் மத்திய அரசு படுகொலை செய்துள்ளது. மனித உரிமைகளுக்காக போராடியவர், சிறையில் இறந்துபோனது பல நூற்றாண்டுகளுக்கு இந்தியாவின்  கௌரவத்திற்கும் மதிப்புகளுக்கும் பாதகமான செய்தியாகவே வரலாற்றில் இடம்பெறும். உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு முகமை, மும்பை உயர்நீதிமன்றம் என அரசு அமைப்புகள் தனி மனிதருக்கு எதிராக அநீதி இழைத்துள்ளதாகவே அனைத்து ஊடகங்களும் இப்போது கூறிவருகின்றன. 

தீவிரவாத தடுப்புச்சட்டம் என்ற பெயரில் ஸ்டேன்சாமி எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு இறந்துபோயுள்ளார். பிரதமரை கொல்ல முயன்றார், இறையாண்மைக்கு ஆபத்து என்ற பெயரில் மத்திய அரசு தன்னை விமர்சிக்கும் எதிர்க்குரல்களை மௌனிக்க வைக்க அடக்கு முறை சட்டங்களை கையாளத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் எளிய மக்களுக்கு உதவும் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் என அனைவருக்குமே ஆபத்தான சங்கதிதான். 

டெக்கன் கிரானிக்கல் 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்