வேலையை கைவிடும் அமெரிக்கர்கள்! - காரணம் என்ன?

 






அமெரிக்கர்கள் வேலை என்பது வாழ்க்கையின் முக்கியமான ஒன்றாக கருதுவதில்லை. அதைத்தாண்டிய விடுமுறை, பார்ட்டி, காதல் என வேறு புறம் சென்றுவிட்டார்கள். இந்த இடத்தை தான் இந்தியர்கள் பிடித்தனர். லீவே போடாமல் வேலைக்கு போய் அமெரிக்கர்களின் நிறுவனத்திற்கு இந்தியர்கள் இன்று இயக்குநர்களாக வந்துவிட்டனர். வளர்ந்து நிற்கின்றனர் என்று கூறலாம். ஆனால் அதேசமயம் ஊழியர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் மன ஒற்றுமை இருக்கிறதா என்றால் கிடையாது. 

இரக்கமில்லாமல் வேலை வாங்குவது, அதிக வேலைப்பளு, இனவெறி, சம்பளம் கூடாதது என பல்வேறு காரணங்களால் அமெரிக்க பணியாளர்கள் வேலையைக் கைவிட்டு வருகின்றனர். அதுவும் ஒருவர் இருவர் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் அங்கு நடைபெறும் இனவெறி தாக்குதல்களால் 30 சதவீதம் பேர் வேலையை ராஜினாமா செய்துவிடுகிறார்கள். இப்போது தகவல்களைப் பார்ப்போம். 


ஏப்ரல் 2021இல் மட்டும் 4 மில்லியன் அமெரிக்கர்கள் தங்கள் வேலையிலிருந்து விலகிக்கொண்டனர். மருத்துவத்துறையில் மட்டும் 7,40, 000 பேர் இப்படி விலகிக்கொண்டு சென்றுவிட்டனர். 

தனியார் துறையில் 3.2 சதவீதம் பேர் வேலையை விட்டு விலகியுள்ளனர். 

மைக்ரோசாப்டின் பணியாளர் பட்டியலில் 40 சதவீத தொழிலாளர்களை பணியிலிருந்து விலக்க முடிவெடுத்துள்ளனர். 


ஐந்தில் ஒருவர் மருத்துவத்துறையில் இருந்து கோவிட் பிரச்னையால் வெளியேற நினைக்கிறார். 2009இல் வேலையை விட்டு விலகுபவர்களின் எண்ணிக்கை 1.3 சதவீதமாக இருந்தது. 2008இல் இந்த எண்ணிக்கை 2 சதவீதமாக இருந்தது. 

2018 இல் தானாகவே முன்வந்து பதவி விலகுவது 15 சதவீதமாக இருந்தது


ஜென் இசட் தலைமுறையினர் தங்களது செல்லப்பிராணியை அலுவலகத்திற்கு கூட்டி வர நினைக்கின்றனர். இதற்கு அனுமதிக்காத நிலையி ல் 70 சதவீதம் பேர் வேலையைவிட்டு விலகிக்கொள்ள நினைக்கின்றனர். 

வேலையைக் கைவிட்டால் ஆறுமாத சேமிப்புத்தொகை உங்களுக்குத் தேவை என துறைசார் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றன. 

க்வார்ட்ஸ் 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்