அசத்தும் பாப்ஸ்டார் அமித் திரிவேதி!

 








யூட்யூபில் எப்போது உலாவி வருபவர்கள் அமித் திரிவேதியின் ஏடி ஆசாத் சேனலை பார்க்காமல் இருக்க முடியாது. இதில் பெரும்பாலும் அனைத்து வீடியோக்களிலும் அமித் பாடி ஆடுகிறார். நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்கிறார். 

சினிமா பாடல்களின் தன்மை இல்லாமலேயே யூட்யூபில் இருபது பாடல்களை வெளியிட்டு விட்டார். பெரும்பாலும் வீடியோக்களில் வெட்கப்படும் அமித், இப்போது தைரியமாக பாடுவதோடு  குழுவாக நடனக் கலைஞர்களோடு சேர்ந்து ஆடுகிறார். எப்படி இந்த மாற்றம் என்று கேட்டோம். முதலில் எனக்கு இசையை உருவாக்கினால் போதும் என்று தோன்றியது. ஆனால் இப்போது இசையமைப்பாளர் என்பவர், தனக்கென தனி சேனல், இசை அமைப்பது, வீடியோக்கள், நேர்காணல் என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுவது முக்கியம். இன்றைய காலத்தில் இது நமக்கு அழுத்தம் கொடுக்கிறதாக மாறியுள்ளது என்கிறார். 

2010 முதல் 2015 ஆண்டு வரையில் ஏராளமான ஆல்பங்களை ஹிட் கொடுத்தவர் அமித் திரிவேதி. தேவ் டி, பாம்பே வெல்வெட், உடான் , இஷ்க்ஜாடே, குயின் ஆகிய படங்களின் பாடல்கள் புகழ்பெற்றவை. தற்போதும் இந்தி படங்களுக்கும் தென்னிந்திய படங்களுக்குமான இசையையும் வழங்குகிறார். தெலுங்கில் சைரா நரசிம்மரெட்டி, வி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

2010க்குப் பிறகு இந்தி படவுலகத்தின் இசை மாற்றம் நடந்தது. இணையம் வந்துவிட்டதால் இரண்டாவது , மூன்றாவது நகரங்களில் திரைப்பாடல்களை பலரும் கேட்கத் தொடங்கினர். வேகமாக பாடல்களை ஹிட்டாக்கவேண்டுமென அழுத்தம் அதிகரித்துள்ளதால் அதன் தரம் காணாமல் போய்விட்டது என்றார் அமித். 

இப்போதுள்ள இணைய வேகத்திற்கு ஏற்றபடி தன்னை தகவமைத்து பாடல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார். இவரது இசையமைப்பில் ஹசன் தில்ரூபா படம் நெட்பிளிக்சில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. குஜராத்தைச் சேர்ந்தவரான அமித், இப்போதுதான் தனது மாநிலப் படம் ஒன்றுக்கு இசையமைக்க போகிறாராம். களம் எதுவாக இருந்தாலும் நல்ல இசை வெல்லும் என சொல்லியபடி புன்னகைக்கிறார். 

இந்தியா டுடே

தேவர்ஸி கோஷ்







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்