திரைப்படமோ, வெப் தொடரோ மக்களின் மனதோடு இணையவேண்டும்! - இர்பான் அக்தர்
இர்பான் அக்தர்
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்
ஓடிடி தளத்தில் தொடர்கள் வெற்றி பெறும் அளவுக்கு திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லையே ஏன்?
திரைப்படமோ, வெப் தொடரோ எதுவாக இருந்தாலும் அது மக்களின் மனதோடு இணைய வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி இணையாதபோது திரைப்படமும், தொடரும் வெற்றி பெறுவது கடினம். நாம் வாழும் காலத்தில் நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக பதிவு செய்வது முக்கியம். அப்போதுதான் அது மக்களை கவரும்.
ராக்கி, க்ரீட், மேரி கோம் என படங்கள் குத்துச்சண்டைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வெற்றி பெறுகின்றன. இப்படி படங்கள் உருவாக்கப்பட என்ன காரணம்?
இதுபோன்ற படங்கள் வெற்றியாளராக உள்ள குத்துச்சண்டை வீரன் தோல்வியுறுவது, தோல்வியுற்றவன் வெற்றி பெறுவது என கதை அமைக்கப்படும். இது படங்களை பார்ப்பவர்களுக்கு ஊக்கமாக அமையும். குத்துச்சண்டை வீர ர்கள் பலருமே சாதாரண பின்னணி கொண்ட குடும்பங்களில் இருந்து வருபவர்கள்தான். தங்கள் உடலை தங்கள் வாழ்க்கைக்காக எப்படி வருத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமான அம்சம்.
பெருந்தொற்று காலத்தில் சினிமாதுறை எப்படி இயங்கியது?
பதினெட்டு மாதங்களில் சினிமாதுறை நிறைய மாறிவிட்டது. பெரும்பாலும் மக்கள் ஓடிடி தளங்களைப் பார்த்து விரும்பத் தொடங்கிவிட்டனர். தியேட்டர் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறையாமல் இருந்தது ஒருகாலம். இப்போது ஓடிடியில் பார்வையாளர்கள், கதை சரியில்லை என்றால் பார்க்கமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளீர்கள். இந்தியா பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டிகளை பார்ப்பீர்களா?
நிச்சயமாக. உலகளவிலான போட்டிகளில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் கலந்துகொள்ளவிருக்கிறார். எனக்கு அவர் வெற்றிபெறுவார் என நம்பிக்கை இருக்கிறது.
இந்தியா டுடே
சுகானி சிங்
கருத்துகள்
கருத்துரையிடுக