ஆண்களுக்கு தலை நடுவிலிருந்து வழுக்கையாவது ஏன்? மிஸ்டர் ரோனி
பதில் சொல்லுங்க ப்ரோ?
மிஸ்டர் ரோனி
பதில் சொல்லும்போது தலையை சொறிவது ஏன்?
இயல்பாகவே இரண்டு வாய்ப்புகளை கொடுத்து இரண்டில் ஒன்று என்றால் பலரும் எதை தேர்ந்தெடுப்பது என தலையை சொறிவார்கள். அது இயல்பானதுதான். இதனை உயிரியலில் டிஸ்பிளேஸ்மென்ட் ஆக்டிவிட்டி என்று கூறுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டும் இந்த பழக்கம் இல்லை பறவைகளுக்கும் கூட உண்டு. பறவை ஆபத்தான சூழலில் தாக்கவா, ஓடிவிடவா என இரு வாய்ப்புகள் உள்ள நிலையில் பதற்றத்துடன் தரையை கொத்துகிறது.
பதற்றத்தில் இருக்கும்போது யோசிக்கிற போஸில் உள்ளதால் அதன் பதற்றம் கூட தணிகிறது என நினைக்க வாய்ப்புள்ளது. 2017இல் செய்த ஆய்வில் மக்காவ் வகை குரங்குகள் இப்படி ஏதேனும் தீவிர யோசனையில் தலையை சாய்த்து சொறிந்துகொண்டிருக்கிற குரங்கை அணுக பயந்து நின்றிருக்கின்றன. அது யோசிக்கிற நிலையில் அதனை தாக்குவது தவறு என்பதை அதன் சொறிகிற பாவனை ஏற்படுத்தியிருகிறது. தலையை சொறிகிற பழக்கம் அப்படியே பாரம்பரியமாக நமது உடலுக்குள் பொதிந்து வந்திருக்கிறது என்று கூறலாம்.
மீன்களால் தன்னை உணர முடியுமா?
முடியாது. ஆனால் முகரும் சக்தியால் பிற மீன் இனங்களை அடையாளம் அறிய முடியும். தன்னுடைய கூட்டமா, சொந்தமா, அந்நியமாக என்பதை எளிதாக அறியும். இதனை அறிய சோதனை ஒன்று செய்யப்பட்டது. அதில் ஜீப்ரா பிஷ் ஈடுபடுத்தப்பட்டது. டிவியில் வரும் பிக்ஸலை மீன் அடையாளம் கண்டு அதனை பலமணிநேரங்களாக பின்தொடர்ந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஆண்களுக்கு தலை நடுவில் இருந்து வழுக்கையாவது ஏன்?
இதற்கு டைஹைட்ரோடெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் மற்றும் மரபணுக்களே காரணம். கபாலத்தை போர்த்தியபடி தோல் உள்ளது. அதில்தான் முடி முளைத்து கர்லிங் ஹேர் வளர்ந்து கர்லிங் ஹேர் வைச்சிருப்பானே வீரபாகு என பலரையும் சொல்ல வைக்கிறது. இதில் முடி, ஹார்மோன் உருவாக்கும் அழுத்தம் இணைவதால் பாதிப்பு ஏற்படுகிறது. உச்சி மண்டையில் முடிக்கற்றை சிறியதாக இருப்பதால் முதலில் எளிதாக விழுகிறது. அதிகளவு டைஹைட்ரோடெஸ்டோஸ்ட்ரோன் சுரப்பதும் முக்கியமானது. வயதுவந்தவர்களுக்கு வழுக்கை என்பது மெல்லத் தொடங்கிவிடுகிறது. ஏறுவெயில் பட்டால் மண்டை மின்னுவது என்பது முடி கொட்டும் வேகம் அதிகரித்த பிறகு நமக்கும் ஊருக்கும் தெரிய வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக