இடுகைகள்

சுதீர் வர்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவரை வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்களை பழிவாங்க வரும் ராவணாசுரா!

படம்
  ராவணாசுரா இயக்கம் சுதீர் வர்மா ரவிதேஜா, பரியா அப்துல்லா, அனு இம்மானுவேல், மேகா ஆகாஷ் பின்னணி இசை - ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர் நகரில் உள்ள முக்கியமான தொழிலதிபர் ஒருவரை, மற்றொரு பிரபலமான ஒருவர் பகிரங்கமாக மதுபான பாட்டிலால் குத்திக்கொன்றுவிட்டு துப்பாக்கியைக் காட்டி ஓட்டல் ஊழியர்களை மிரட்டிவிட்டு தலைமறைவாகிறார். அந்த வழக்கு ரவீந்தர் என்பவரின் அலுவலகத்திற்கு வருகிறது. அவரது முதலாளி சட்டநிறுவனத்தை நடத்தி வருகிறார். கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டவரின் மகள் வழக்கை ஏற்று வாதாட கூறுகிறாள் அவள் கூற்றுப்படி, அவளது தந்தை, தான் அந்தக்கொலையை செய்யவில்லை. கொலை நடந்தபோது தான் மயக்கமாக காரில் இருந்ததாக கூறுகிறார். ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் கொலை செய்துவிட்டு நிதானமாக நடந்து சென்றதற்கான அழுத்தமான ஆதாரங்கள் மனிதர்களின் நேரடி சாட்சியமாகவும் சிசிடிவியில் காணொலியாகவும் பதிவாகியுள்ளது.  இதற்கடுத்து, இன்னொரு பிரபலமான அடியாள் ஒருவர போலீஸ் கமிஷனரின் அலுவலகத்திற்கு வந்து கமிஷனரை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிக்கிறார். இதை காவலர்களே நேரடியாக பார்த்துவிடுகிறார்கள். அவரை தேடிப்பிடித்து கைது செய்யும்போது அவர

ஆதரவற்ற பெண்களை கருமுட்டைக்காக கடத்தும் மாபியாவை வேட்டையாடும் இரு பெண்கள்! - சாகினி தாகினி - சுதீர் வர்மா

படம்
 சாகினி தாகினி  ரீமேக் - மிட்நைட் ரன்னர்ஸ்  சுதீர் வர்மா ரெஜினா, நிவேதா தாமஸ்  கொரிய படமான மிட்நைட் ரன்னர்ஸ் படத்தை ரீமேக் செய்து மாற்றி எடுத்து இருக்கிறார்கள். படத்தை தமிழில் பார்த்தால் அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. டப் படம் என்றால் படம் உள்ள பகுதி சார்ந்தே பெயரை சொல்லி படத்தை தமிழ் செய்தால் என்ன கெட்டுவிடப்போகிறது.... தெலுங்கானவை எப்படி மதுரை ஆக்க முடியும்..  போலீஸ் அகாடமிக்கு இருவர் தேர்வாகி வருகிறார்கள். ஷாலினி, தாமினி. இவர்கள்தான் சாகினி, தாகினி என்ற இரு பாத்திரங்கள். இருவரும்  தொடக்கத்திலேயே முட்டி மோதி பிறகு நடைபெறும் சம்பவத்தால் நண்பர்களாகிறார்கள். நட்பு என்றால்,  ஒருவர் கண் அசைத்தால் இன்னொருவர் அப்படியே செய்து முடிக்கும் அளவுக்கு நெருக்கமாகிறார்கள். ஒருமுறை பப்பில் மது அருந்திவிட்டு சாலையில் வரும்போது திடீரென பைக்கில் வேகமாக இளைஞர்கள் வர அவர்களை இளம்பெண் ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவளை திடீரென வேன் ஒன்றில் பிடித்து செல்கிறார்கள். அதைப் பார்த்து ஷாலினி, தாமினி என இருவரும் அவளை பின் தொடர்கிறார்கள். அதில், அவளை தூக்கிச்சென்றவர்கள் எப்படிப்பட்ட குற்றவாளிகள் என தெரிகிறது. இந்த நேரத்த